நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்துள்ள புதிய படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நாயகனாகவும், ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாகவும் புதிய படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ’யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
விக்கி பாஸ்கர் எழுதி, இயக்கியுள்ள இந்தப் படத்தை, விஷ்ணு விஷால், சஞ்சய் அர்ஜுன்தாஸ் வத்வா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
மேலும் இந்தப் படத்தில் ஏஞ்சல் மரியா, மோனிஷா மோகன், கருணாகரன், சேத்தன், தேவதர்ஷினி மற்றும் அனுபமா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் பிரபலங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
Summary
The teaser for the new film starring actress Preethi Asrani as the female lead has been released online and is garnering the attention of fans.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
த்ரிஷ்யம் - 3 டீசர்!
29 முன்னோட்ட விடியோ!

பொல்லாத ஆசைகள்... 29 படத்தின் புதிய பாடல் வெளியானது!

கயல் சந்திரனின் சிங்கா பட டீசர்!
விடியோக்கள்

Petrol விலை உயர்வு ஏன் ஆபத்து? இந்தியாவுக்கு வரும் Warning Signals!
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK




