வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

இசைத் தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் அனிருத்தின் ரிவென்ஞ்ச் ராகம்!

டிசி பின்னணி குறித்து...

News image

டிசி போஸ்டர்

Updated On :30 மே 2026, 3:56 pm IST

டிசி திரைப்பட டிரைலரில் இடம்பெற்ற பின்னணி இசை பெரிய கவனம் பெற்றுள்ளது.

கமர்சியல் திரைப்படங்களுக்கான பின்னணி இசையை வடிவமைப்பதில் அனிருத்தை அடித்துக்கொள்ளவே முடியாது என்கிற அளவிற்குக் கடந்த சில ஆண்டுகளாக அபாரமான பின்னணி இசைகளையும் உருவாக்கி வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்திற்கான அறிவிப்பு விடியோ பின்னணி இசை, அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் படத்தின் அறிவிப்பு இசை, ரஜினி - கமல் படத்தின் அறிவிப்பு இசை ஆகியவை லட்சகணக்கான முறை ரீல்ஸ் விடியோகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி திரைப்படத்தின் டிரைலரில், “ரிவென்ஞ் ராகம் (Raga of revenge)” என்கிற பின்னணி இசையை அனிருத் பயன்படுத்தியுள்ளார். டிரைலர் வெளியான போதே இந்த பின்னணி இசை வைரல் ஆனதுடன் பலரும் ரீல்ஸ் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்பாடிஃபை (spotify) இசைத் தளத்தில் இந்த பின்னணி இசை 1 கோடி முறைக்கும் மேல் கேட்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல், யூடிபில் 2 கோடி பார்வைகளுக்கு மேலாகவும் மற்ற தளங்களிலும் லட்சக்கணக்கான முறை இப்பாடல் கேட்கப்பட்டுள்ளதால் இது ரிவெஞ்ச் ராகத்தின் ஆதிக்கம்தான் என ரசிகர்கள் கருதுகின்றனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.