திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!தமிழக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி!26 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய உதகை மலை ரயில் சேவை; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

யாருடைய அரியணையும் வேண்டாம்... லிடியன் பதிவு!

லிடியன் நாதஸ்வரம் பதிவு கவனம் பெற்றுள்ளது....

இயக்குநர் வெற்றி மாறனுடன் லிடியன் நாதஸ்வரம்

Updated On :

இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் அரசன் திரைப்படத்திலிருந்து விலகினார் என்றும் அவருக்குப் பதிலாக லிடியன் நாதஸ்வரம் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இயக்குநர் வெற்றி மாறனுக்கும் அனிருத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் இன்ஸ்டாகிராமில் இயக்குநர் வெற்றி மாறனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ”நான் பிறருக்குச் சொந்தமான அரியணையைக் கேட்கவோ பகிரவோ நினைப்பதில்லை என்பதைப் பணிவுடனே சொல்கிறேன். அனிருத் அண்ணன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. எங்களின் திருக்குறள் பாடல் உருவாக்கத்தில் அவரின் பங்களிப்புக்கு மனமார்ந்த நன்றி.

தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைக்க ஆவலுடன் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் நேரம் அமைய வேண்டும் என நம்புகிறேன். அதற்காகக் காத்திருந்தததும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இயக்குநர் வெற்றி மாறன் சார் எங்கள் வீட்டிற்கு வந்து நல்ல செய்தியைச் சொன்னார். அவருக்கு என் இதயம் கனிந்த நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், அரசன் திரைப்படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

Music composer Lydian Nadhaswaram has released a post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.