திருப்பரங்குன்றம் தூணில் தீபம்! வழிகாட்டுதல் குழுவில் ஆட்சியர்!திருப்பரங்குன்றத்தில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்! நீதிபதிகள் அறிவிப்புதிடீரென அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?தீபத்தூண் பகுதியில் இன்று யாருக்கும் அனுமதி இல்லை; நாளை வாருங்கள்! சிஆர்பிஎஃப் அதிகாரி வேண்டுகோள்பெரியார் அறிவுலக வழக்கு: அகல் விளக்கு உரிமையாளரை விசாரிக்க 3 நாள் போலீஸ் காவல்!தொகுதி மறுவரையறை மசோதா: கோரிக்கைகளை ஏற்றதால் திமுக ஆதரவு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

மகாராஜா - சாச்சனாவுக்கு டாம் ஹாங்க்ஸ் பாராட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது: விஜய் சேதுபதி

மகாராஜா படத்தைப் பாராட்டிய ஹாலிவுட் நடிகருக்கு விஜய் சேதுபதி அளித்த பதில் குறித்து...

Tom Hanks, Sachana, Vijay Sethupathi

டாம் ஹாங்க்ஸ், சாச்சனா, விஜய் சேதுபதி - கோப்புப் படங்கள்

Updated On :

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மகாராஜா படத்தையும் சாச்சனாவையும் புகழ்ந்து பேசியதற்கு நடிகர் விஜய் சேதுபதி, “நான் அதிர்ச்சி அடைந்தேன்” எனக் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியின் 50 ஆவது திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். 

 ஒரு குப்பைத்தொட்டியையும் அதன் பின் இருக்கும் எமோஷனலாக கதையையும் மையமாக வைத்து படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது.

இந்தப் படத்தைப் பாராட்டி பேசிய ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் க்ளைமேக்ஸ் காட்சியில், “இன்னும் என்னால் அப்பெண்ணின் நடிப்பிலிருந்து வெளியேற முடியவில்லை. என்னவொரு அசாதாரணமான நடிகை! என்னால் இப்படி நடிக்க முடியாது. நானாக இருந்திருந்தால் அவனைக் கொன்றிருப்பேன்” எனத் தெரிவித்தார்.

எம்மி விருது விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி சென்னைக்குத் திரும்பினார். அவரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசியிருப்பதாவது:

எம்மி விருதுக்கு என்னை அழைப்பார்கள் என நினைக்கவில்லை; அதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். டாம் ஹாங்க்ஸ் மகாராஜா படத்தைப் பார்த்தார் என்றும் அவர் அதில் சாச்சனாவைப் பாராட்டினார் என்று அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.

எங்கள் தோழி கவிதா மகாராஜா உள்பட மூன்று படத்தைப் பரிந்துரைத்துள்ளார். நான் டாம் ஹாங்க்ஸின் ரசிகன். அவர் நமது படத்தைப் பார்த்து, பாராட்டியிருப்பது மிகவும் பெரிய விஷயம் என்றார்.

Summary

Vijay Sethupathi reacts to Tom Hanks' Maharaja praise: 'I was shocked…'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.