தொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

வெற்றிமாறன் - கென் கருணாஸ் - சாய் அபயங்கர் கூட்டணியின் புதிய படம்: ப்ரோமோ அப்டேட்!

வெற்றிமாறன் - கென் கருணாஸ் - சாய் அபயங்கர் கூட்டணியின் புதிய படத்தின் ப்ரோமோ விடியோ பற்றி...

சாய் அபயங்கர் - கென் கருணாஸ் -

Updated On :

வெற்றிமாறன் - கென் கருணாஸ் - சாய் அபயங்கர் கூட்டணியின் புதிய படத்தின் ப்ரோமோ விடியோ இன்று வெளியானது.

இயக்குநர் வெற்றிமாறன் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் அரசன் படத்தை இயக்கி வருகிறார். அதேநேரம், கென் கருணாஸை வைத்து ராஜன் வகையறா படத்தையும் இயக்கி வருவதாகச் செய்திகள் வெளியானது. இரு படங்களும் வடசென்னை படத்தின் கதைக்களத்தில் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது.

வடசென்னை படத்தின் முக்கியக் கதாபாத்திரமான அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ராஜன் வகையறா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அமீரின் சிறுவயது கதாபாத்திரத்தில் கென் கருணாஸ் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அதை உறுதிப்படுத்தின.

இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமோ விடியோ இன்று வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் கென் கருணாஸ் நாயகனாக நடிப்பதாகவும் சாய் அபயங்கர் இசையமைப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக ப்ரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் அறிமுக விடியோ அறிவிப்பு இரு நாள்களில் வெளியாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் - கென் கருணாஸ் - சாய் அபயங்கர் கூட்டணியின் புதிய படத்தின் அறிவிப்பு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Summary

New film from the Vetrimaaran - Ken Karunas - Sai Abhyankar collaboration: Promo update!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.