
ஓடிடியில் பிருத்விராஜின் கலிஃபா எப்போது?
நடிகர் பிருத்விராஜின் கலிஃபா படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...
கலிஃபா போஸ்டர் - படம்: எக்ஸ்
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான கலிஃபா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான புதிய ஆக்சன் திரைப்படமான கலிஃபா ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
டர்போ திரைப்படத்தை இயக்கிய வைசாக் இப்படத்தை இயக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். தங்கக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு நாயகனுக்கும் கேங்ஸ்டருக்குமான கதையாக இந்தப் படம் உருவாகியிருந்தது.
மேலும் இந்தப் படத்தில், மாளவிகா ஷர்மா, கீர்த்தி ஷெட்டி, நிதின் முகேஷ், இந்திரன்ஸ், ஷம்மி திலகன், மோகினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
படத்துக்கான திரைக்கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார். அவரே ஜினு இன்னோவேஷன்ஸ் மூலம் தயாரித்தும் இருக்கிறார். ஜோமன் டி ஜான் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கலிஃபா திரைப்படம் வரும் அக். 8 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Details regarding the OTT release of the film Khalifa, starring actor Prithviraj, have been revealed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




