முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் பொறுப்பேற்றார்!சென்னையில் தரவு மையம் திறப்பு! முதல்வர் விஜய், சிங்கப்பூர் துணை பிரதமர் பங்கேற்பு!தங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு!அமைச்சரவையில் மாற்றமா? இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு!

ஜெயிலர் - 2 திரைப்படத்தைப் பார்த்த தனுஷ்!

ஜெயிலர் - 2 முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த தனுஷ்...

நடிகர் தனுஷ் தன் மேலாளர் ஷ்ரேஸுடன்.

Published On :

நடிகர் தனுஷ் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்து வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் ஆர்வம் காரணமாக தென்னிந்திய அளவில் இப்படத்திற்கு பெரிய வணிகம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. மேலும், இப்படத்திற்கு சராசரிக்கும் மேல் என்கிற விமர்சனங்களும் வந்துகொண்டிருப்பதால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைச் சென்னையில் பார்த்து வருகிறார். ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தைப் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் ரஜினிகாந்த்தின் ஒவ்வொரு திரைப்படங்களையும் முதல் நாள் பார்க்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார்.

மேலும், தனுஷின் மகன்களும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் ஜெயிலர் - 2 திரைப்படத்தைப் பார்த்து வருகின்றனர்.

Actor Dhanush is watching the first show of the film Jailer 2 on its opening day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.