
தயாரிப்பாளராகும் நடிகை நித்யா மெனன்!
நடிகை நித்யா மெனன் தயாரிப்பாளராகிறார்...

நித்யா மெனன் - Instagram | Nithya Menen
நடிகை நித்யா மெனன் தயாரிப்பாளராகத் தன் முதல் திரைப்படத்தைத் தயாரிக்க உள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மெனன். இறுதியாக, தமிழில் தலைவன் தலைவி படத்தில் நடித்து வெற்றியையும் பெற்றார். அடுத்தடுத்து சில படங்களில் நடித்தும் வருகிறார்.
அண்மையில், “திரைப்படங்களில் நடிகைகளைக் கவர்ச்சியாகக் காட்டுவது தென்னிந்திய சினிமாவில் மட்டும் நடப்பது அல்ல. புகழடைந்தால் போதும் என நினைக்கும் நடிகைகள் இந்தப் போக்கிற்குத் துணை போகின்றனர். ஆனால், ஆரம்பத்திலேயோ அல்லது படப்பிடிப்பிலேயோ தன்னை மிகக் கவர்ச்சியாகக் காட்டும்போதோ அல்லது தனக்கு விருப்பமில்லாத காட்சியை எடுக்கும்போது திட்டவட்டமாக மறுப்பை வெளிப்படுத்துவதுடன் நடிகைகள் தங்களுக்காக சில எல்லைகளையும் வைத்திருப்பது முக்கியம்” எனக் கூறி கவனம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், நடிகை நித்யா மெனன் கெயூரி புரடக்ஷன்ஸ் என்கிற தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் முதல் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். ’யாமிருக்க பயமே’ திரைப்படத்தை இயக்கிய டிகே இப்படத்தை இயக்க, நாயகியாக நித்யா மெனனே நடிக்கிறார். இப்படம் நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Actress Nithya Menen is set to produce her first film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






