
பல காலகட்டங்கள்... வாரணாசி கதையைப் புகழ்ந்த பிருத்விராஜ்!
வாரணாசி திரைப்படத்தைப் புகழ்ந்த பிருத்விராஜ்...

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் வாரணாசி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் வாரணாசி. இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். ராஜமௌலியின் முந்தைய படமான 'ஆர்ஆர்ஆர்'-க்காக ஆஸ்கர் விருது வென்ற எம். எம். கீரவாணி 'வாரணாசி' படத்திற்கு இசையமைக்கிறார்.
ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றன.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், “வாரணாசி திரைப்படம் வெறும் டைம் டிராவல்லர் கதை மட்டுமல்ல. இப்படம் பல காலகட்டத்தைக் காட்டும்படி உருவாகிவருகிறது. படப்பிடிப்பில் இயக்குநர் ராஜமௌலி இப்படியான பிரம்மாண்ட கதையை எடுத்து வருவது ஆச்சரியமளிக்கிறது. நடிகர் மகேஷ் பாபுடன் இணைந்து நடிப்பதும் பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ஐ நோபடி, கலிஃபா ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது குறிப்பிடத்தக்கது.
Actor Prithviraj Sukumaran has spoken about the movie Varanasi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





