
அட்லீக்கு பதிலடி கொடுத்தாரா விஜய் சேதுபதி? விடியோ வைரல்!
பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியது குறித்து...

விஜய் சேதுபதி, அட்லீ - படங்கள்: யூடியூப் / திங்க் மியூசிக் இந்தியா.
பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அட்லீ ஒரு குட்டிக்கதை கூற, அதற்கு பதில் கொடுக்கும் வகையில் விஜய் சேதுபதி பேசியதாக விடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் ’பத்தா’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.
நடிகராக இருந்து கட்சி தொடங்கி தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார் சி. ஜோசப் விஜய். பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கூறிய கருத்து முதல்வரைப் பற்றியது என சமூக ஊடங்களில் பேசுபொருளானது.
இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் அந்த தொலைக்காட்சி நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்தது. இருப்பினும் விஜய்யின் ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து வந்தார்கள்.
இந்த நிலையில், பத்தா இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அட்லீ , முதல்வர் விஜய் குறித்து பேசிவிட்டு, ஊர் வாயை அடைக்க முடியாது என்ற ஒரு குட்டிக்கதையைக் கூறினார்.
இதன்மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதைத்தான் அட்லீ மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் எழ, அட்லீ பேசிய விடியோ வைரலானது.
அதே நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசும்போது, அந்தப் படத்தில் நடித்திருக்கும் சாய் என்ற சிறுவனை முன்நிறுத்தி, “ இரண்டு அறிவாளிகள் சந்திக்கும்போது அவர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள். இரண்டு வீரர்கள் சந்திக்கும்போது, யார் பலசாலி என்று காட்டிக் கொள்வதற்காக சண்டை போட வாய்ப்புள்ளது. ஆனால் அறிவாளியோ, வீரனோ ஒரு அப்பாவியைச் சந்திக்கும்போது, நடைபெறும் மேஜிக்தான் இந்தப் படம் என்று நான் நம்புகிறேன்.
அப்பாவிகளுடன் எவ்வளவு பெரிய அறிவார்ந்த சிந்தனைகளை எடுத்துச் சென்று, சண்டை போட்டாலும் அவர்களை உங்களால் வெற்றிபெற முடியாது. புராணங்களில் ஔவையாருக்கும் முருகனுக்கும் நடந்த உரையாடலை நான் வியப்புடன் பார்ப்பேன். நாடு முழுக்கச் சுற்றி ஞானமடைந்த ஒரு பாட்டியிடம் ஆடு மேய்க்கிற சிறுவன், ‘பாட்டி பசிக்குதா? பழம் வேண்டுமா?’ என்று கேட்டபோது, ‘கொஞ்சம் பறித்துப் போடுப்பா’ என்று சொல்வார்.
’சுட்டப்பழம் வேண்டுமா? சுடாதப்பழம் வேண்டுமா’ என்று அந்த சிறுவன் கேட்க, ‘இந்தப் பையனுக்குன் என்ன தெரியப் போகிறது? இந்த நேரத்தில் சுட்டப் பழத்துக்கு எங்கு செல்வான் ?’ என நினைத்து , ‘சுடாத பழமே கொடுப்பா’ என்று கூறுவார்.
மரத்தை உலுக்கி விழுந்த பழத்தை எடுத்து ஔவையார் ஊதும் போது, ’பழம் சுட்டுவிட்டதா?’ என்று அந்தச் சிறுவன் கேட்பான். அந்தக் கேள்வியை ஒரு குழந்தை மட்டும்தான் கேட்க முடியுமேதவிர, படித்தவரோ அறிவாளியோ அதைக் கேட்க முடியாது” என்று தெரிவித்தார்.
விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சு அட்லீக்கு பதில் கொடுக்கும் வகையில் இருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவிவரும் நிலையில், இந்த விடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Videos are going viral on social media showing Vijay Sethupathi responding to a short story narrated by Atlee at the audio launch of the movie Patha.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








