
அனைத்து பதிவுகளிலும் கமெண்ட் செய்யும் மொத ராத்திரி பட இயக்குநர்..! ஜென் ஸீ தாக்கம்?
மொத ராத்திரி பட இயக்குநர் ராஜா கருப்பசாமி இன்ஸ்டாவில் செய்யும் குறும்புத்தனங்கள் குறித்து...

நாயகி அனிஷ்மா உடன் இயக்குநர் ராஜா கருப்பசாமி - படம்: இன்ஸ்டா / ராஜா கருப்பசாமி
மொத ராத்திரி பட இயக்குநர் ராஜா கருப்பசாமி இன்ஸ்டாவில் படத்தைப் பற்றி வரும் ஒவ்வொரு பதிவிலும் ரீல்ஸிலும் கமெண்ட் செய்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பில் ’மொத ராத்திரி’ என்ற திரைப்படம் கடந்த ஆக.21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
புதியதாகத் திருமணமான தம்பதியின் முதல் இரவில் நடக்கும் நகைச்சுவையான கதைகளத்துடன் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த செப்.18 ஆம் தேதி வெளியாகிய இந்தப் படம் கூடுதல் பார்வையாளர்களைப் பெற்று வருகிறது.
இந்தப் படம் குறித்து வரும் ஒவ்வொரு மீம்ஸ்கள், பதிவுகள், பாராட்டுகள், ரீல்ஸ்களுக்கு இயக்குநர் ராஜா கருப்பசாமி கமெண்ட் செய்து வருகிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
சில இளைஞர்கள், “இயக்குநருக்கு வேலை இல்லையா” என ஜாலியாக கிண்டல் செய்யும் பதிவிலும் இயக்குநர் கமெண்ட் செய்து சேட்டை செய்து வருகிறார். இது கூடுதல் அன்பை இணைய வாசிகளிடம் பெற்று வருகிறது.

தன்னைப் பற்றிய கேலிக்கு இயக்குநரின் கமெண்ட்ஸ். - படம்: இன்ஸ்டா / ஏரியா மீம்ஸ்
22 வயதாகும் ராஜா கருப்பசாமி ஜென் ஸீ இளைஞர்களிடம் மிகவும் புகழ்ப்பெற்று வருகிறார். இயக்குநரும் ஜென் ஸீ என்பதால் “இதுதான் ஜென் ஸீக்களின் தாக்கம்” எனப் பாராட்டி வருகிறார்கள்.
பல இயக்குநர்கள் இன்ஸ்டாவில் வெறுமனே படத்தின் புரமோஷனுக்காக கணக்கை வைத்திருக்கும் நிலையில், ராஜா கருப்பசாமியின் செயல் பலரிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Summary
The director of the movie Modha Rathri comments on every single post...! Is this the 'Gen Z' influence?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








