
தங்கம் என்றால் ராதாவுக்கு பலவீனம், உண்மையை சொன்னால் சிறை செல்வார்: நடிகை அம்பிகா பரபரப்பு பேட்டி!
நடிகை அம்பிகா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி குறித்து...

நடிகை அம்பிகா - படம்: விடியோ கிளிப்
ரூ. 46 கோடி அளவில் காசோலை மோசடி நடைபெற்றதாக தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் குஞ்சன் நாயர் மீது மீது, நடிகை ராதா புகார் அளித்த நிலையில், அதற்கு நடிகை அம்பிகா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 80-களில் பல வெற்றிப் படங்களில் நடித்து குடும்ப ரசிகர்களை கவர்ந்தவர்கள் நடிகை அம்பிகா மற்றும் ராதா சகோதரிகள். இவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகை ராதாவுக்கு சொந்தமான, கையொப்பமிடப்பட்ட வெற்று காசோலைகளை அவருக்கு தெரியாமல் எடுத்து, சுமார் ரூ. 46 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக, நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் மீது நடிகை ராதா, கடந்த திங்கள் கிழமை சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக நடிகை அம்பிகா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
என்னுடைய தங்கை ராதா, என் மீது புகார் அளித்துள்ளார். அதற்கான விளக்கத்தை அளிக்க உங்களை அழைத்துள்ளேன். ராதா எனக்கு காசோலையை கொடுத்தார் என்பதும் உண்மை, அந்த காசோலையை அவர் நிறுத்தினார் என்பதும் உண்மை.
ஏஆர்எஸ் கார்டன்ஸ் என்னுடைய குழந்தை போன்றது. அந்த கார்டன் என்னிடம் இருந்து அபகரிக்கப்பட்டது. நான் தொலைபேசியில் அழைத்தால் ராதா எடுப்பதில்லை. என் தங்கை தங்கத்தைப் பார்த்தாலே ஒரு மாதிரி ஆகிவிடுவார். தங்கம் என்றாலே அவருக்கு பலவீனம், என்னுடைய தங்க நகைகள் அவரிடம் நிறைய இருக்கிறது. அதைக் கேட்டோம், அதற்கும் பதில் கிடையாது.
தங்கத்தை திருப்பி தராததற்கு ஒரு குறிப்பிட்ட தொகை, ஏஆர்எஸ் கார்டன்ஸ் தொடர்பான பங்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை என காசோலைகளில் பணம் நிரப்பி கையெப்பம் இட்டு அவரே கொடுத்தார். ராதா எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்திற்காகத்தான் 3 காசோலைகள் கொடுத்தார்.
காசோலை கொடுத்தது அவர், நிறுத்த சொன்னது அவர். ஆனால், அவர் என் மீது புகார் அளித்துள்ளார். எங்கள் வீட்டில் அதிக கவனமாக இருப்பவர் நடிகை ராதா. அவர் கைப்பைக்கும் பூட்டு போடுவார்.
சொத்து தகராறை தீர்க்க காசோலை தந்தது ராதாதான், அதை நிறுத்தியதும் அவர்தான். காசோலை மோசடி செய்ததற்காக ராதா மீது நான்தான் புகார் கொடுத்திருக்க வேண்டும். நான் உண்மையை சொன்னால் ராதா சிறை செல்ல நேரிடும்” என்றார்.
Summary
Actress Ambika has issued a clarification after her sister, actress Radha, filed a complaint against her and their brother, Kunjan Nair, alleging a cheque fraud amounting to rs. 46 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







