
அக்காவை நம்பாமல் யாரை நம்புவது... கண்ணீர் மல்க நடிகை ராதா பேட்டி!
ரூ. 46 கோடி பண மோசடி தொடர்பாக நடிகை ராதா பேட்டி.

நடிகை ராதா - படம்: எக்ஸ்
ரூ. 46 கோடி காசோலை மோசடி தொடர்பாக, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் குஞ்சன் நாயர் மீது மீது, நடிகை ராதா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
நடிகை ராதாவுக்கு சொந்தமான, கையொப்பமிடப்பட்ட வெற்று காசோலைகளை அவருக்கு தெரியாமல் எடுத்து, சுமார் ரூ. 46 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக, நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் மீது நடிகை ராதா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகை ராதா பேசுகையில், ”எனக்கு சொந்தமான, கையொப்பமிடப்பட்ட வெற்று காசோலைகள் மூலம் சுமார் ரூ. 46 கோடி அளவில் மோசடி நடைபெற்றுள்ளது. அதற்காக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்.
வளசரவாக்கத்தில் இருந்த என் வீட்டில், எனக்கு சொந்தமான பொருள்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். அது தொடர்பான புகாரும் கொடுத்துள்ளேன். ஒர் ஆண்டாக, அந்த வீட்டுக்கு செல்ல என்னை விடவில்லை.
என்ன புகார் அளிக்க வேண்டுமோ? அதைக் கொடுத்துள்ளேன். அதை காவல் துறை விசாரிக்கும். காசோலையானது, அம்பிகா அக்கா பெயரில் போடப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி மூலம் இந்த தகவல் எனக்கு தெரியவந்தது.
வங்கியை தொடர்புகொண்டு பணபரிவர்த்தனையை நிறுத்தினேன். இரண்டாவது முறையும் காசோலை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய குறிக்கோள் புரிகிறது. அதனால்தான் புகார் அளித்துள்ளேன்.
என் வீட்டில் நம்பிக்கையாக வைத்த அந்த காசோலையை அவர்கள் எடுத்திருப்பார்கள். அக்காவை நம்பாமல் யாரை நம்புவது என நினைத்திருந்தேன். என் அக்கா தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டால், நான் அழைப்பை எடுக்க மாட்டேன்” என்றார்.
Summary
Actress Radha has lodged a sensational complaint against her sister, actress Ambika, and her brother, Kunjan Nair, regarding a cheque fraud involving Rs 46 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







