
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிக்மா திரைப்பட இயக்குநர் ஜேசன் சஞ்சய் பங்கேற்றுள்ளது குறித்து...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய் - இன்ஸ்டாகிராம்
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிக்மா திரைப்பட இயக்குநர் ஜேசன் சஞ்சய் பங்கேற்றுள்ளார். அக். 2 ஆம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகளுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. ஹிந்தியில் 20 சீசன்கள் கடந்துள்ள நிலையில், தெலுங்கு மற்றும் தமிழில் 10 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியுள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகப்படியான பார்வையாளர்கள் உள்ளதால், படத்திற்கான புரமோஷன்களுக்காக புதிய பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம்.
அந்த வகையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிக்மா படத்திற்காக தமிழக முதல்வர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், படத்தின் நாயகன் சந்தீப் கிஷன் ஆகியோர் பங்கேற்றனர்.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் நாகர்ஜுனா, ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷனை வரவேற்றார். மேடையில் இருந்தவாறே பிக் பாஸ் போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்களுடன் ஜேசன் சஞ்சய் கலந்துரையாடினார். பிக் பாஸ் போட்டியாளராக உள்ள நடிகர் திரிகுன்னின் படங்களைப் பார்த்துள்ளதாகவும், அவரின் நடிப்பு மிகவும் பிடிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இதனால் நெகிழ்ச்சி அடைந்த திரிகுன், சஞ்சய்க்கு நன்றி கூறி படம் வெற்றி பெற வாழ்த்து கூறினார். தெலுங்கிலும் சிக்மா படம் நேரடியாகப் படம் வெளியாகவுள்ளதால், படத்திற்கான விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Summary
Jason Sanjay in the Bigg Boss show with sandeep kishan nagarjuna
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






