
மீண்டும் சூர்யாவை இயக்கும் திட்டத்தில் வெங்கி அட்லுரி?
சூர்யா - வெங்கி அட்லுரி கூட்டணி தொடர்பாக...

இயக்குநர் வெங்கி அட்லுரி, நடிகர் சூர்யா
இயக்குநர் வெங்கி அட்லுரி மீண்டும் நடிகர் சூர்யாவை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கில் முன்னணி இயக்குநராக இருப்பவர் வெங்கி அட்லுரி. நடிகர் தனுஷை வைத்து வாத்தி, துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர், சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய திரைப்படங்களை இயக்கி தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
இதனால், தெலுங்கில் வெற்றிகரமான இயக்குநராகவும் உள்ளதால் வெங்கியின் அடுத்த திரைப்படத்தை இயக்க பல தயாரிப்பு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.
தற்போது, வெங்கி அட்லுரி நடிகர் துல்கர் சல்மானை வைத்து ‘லக்கி பாஸ்கர் - 2’ திரைப்படத்தை இயக்கும் பணிகளில் உள்ளதாகத் தெரிகிறது. இதனை முடித்ததும் நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Reports indicate that director Venky Atluri plans to direct actor Suriya again.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






