பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நடிகர் சூர்யாவை இயக்கும் மணிரத்னம்?

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா...

நடிகர் சூர்யா, இயக்குநர் மணிரத்னம்

Published On :

நடிகர் சூர்யா - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் மணிரத்னம் இந்திய சினிமாவே வியக்கும் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். இறுதியாக நடிகர் கமல் ஹாசன், சிலம்பரசனை வைத்து தக் லைஃப் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக தோல்வியைச் சந்தித்தது.

தற்போது, நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் இஞ்சி வெல்லம் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். காதல் திரைப்படமாக இது தயாராகி வருவதால் மணிரத்னம் ‘டச்’ இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் கடைசியாக ஆயுத எழுத்து திரைப்படத்தில் இணைந்திருந்தனர். தற்போது, இக்கூட்டணி மீண்டும் இணைந்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர். நடிகர் சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றியைத் தொடர்ந்து தன் சீன் திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

Reports suggest that a new film featuring the collaboration of actor Suriya and director Mani Ratnam is likely to be made.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.