
அனுமன் தொடர் ஒளிபரப்பில் மீண்டும் மாற்றம்!
அனுமன் தொடர் ஒளிபரப்பில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக....

அனுமன் தொடர் - படம்: விடியோ கிளிப்
பக்தித் தொடரான அனுமன் சீரியல் ஒளிபரப்பில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் இதிகாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் அனுமன் தொடர், பல தொடர்களைப் பின்னுக்குத் தள்ளி, டிஆர்பியில் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக ஒளிபரப்பாகி வந்த இராமாயணம் தொடர் டிஆர்பியில் முன்னிலையில் இருந்த நிலையில், அதற்கு மாற்றாக தொடங்கப்பட்ட அனுமன் தொடரும் டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வருகிறது.
இதிகாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகிவரும் அனுமன் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தத் தொடர் எப்போது ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், பார்ப்பதற்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
கடந்தாண்டு செப். 29 ஆம் தேதி தொடங்கப்பட்ட அனுமன் தொடர் வார நாள்களில் நாள்தோறும் ஒளிபரப்பப்பட்டது. பின்னர், வார இறுதி நாளான ஞாயிறுதோறும் காலை 9 முதல் 10 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அனுமன் தொடர் ஒளிபரப்பில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு, ஞாயிறுதோறும் காலை 9 முதல் 9.30 மணி வரை 30 நிமிடங்கள் மட்டும் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படும் அனுமன் தொடரை, நாள்தோறும் ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Summary
There has been another change in the broadcast schedule of the devotional serial 'Hanuman'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







