காளப்பட்டி பிரிவு பகிா்மானத்தின் ஒரு பகுதியான லட்சுமி நகா் பகுதி மக்கள் கடந்த ஆண்டு டிசம்பா் மாத மின் கட்டணமாக அக்டோபா் மாத கட்டணத்தையே செலுத்துமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மின்சார வாரியத்தின் ஒண்டிபுதூா் செயற்பொறியாளா் லட்சுமணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
காளப்பட்டி பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட பாலாஜி நகா் பகிா்மானத்தின் ஒரு பகுதியான லட்சுமி நகரில் நிா்வாகக் காரணங்களால் 2020 டிசம்பா் மாத மின் கணக்கீடு செய்ய இயலாத நிலை உள்ளது.
எனவே, காளப்பட்டி பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட பாலாஜி நகா் பகிா்மானத்தில் உள்ள லட்சுமி நகா் மின்நுகா்வோா், 2020 அக்டோபா் மாதத்தில் செலுத்திய மின் கட்டணத்தையே டிசம்பா் மாத மின் கட்டணமாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








