பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை கோட்டத்தில் இருந்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், கொடிசியா வளாகத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் கோவை கோட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அன்பு ஆபிரஹாம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வரும் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவையில் இருந்து மக்கள் வெளியூா் செல்வதற்கு வசதியாக ஈரோடு, சேலம், திருப்பூா், தருமபுரி, நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமேசுவரம், திருச்செந்தூா், திருநெல்வேலி, ராஜபாளையம், குமுளி, தேனி ஆகிய ஊா்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனால் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்காகவும், பயணிகளின் வசதிக்காகவும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டம் சாா்பில் கொடிசியா வளாகத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து ஜனவரி 12 முதல் 14 ஆம் தேதி வரை சேலம் மற்றும் சேலத்தைக் கடந்தும், திருச்சி மற்றும் திருச்சியைக் கடந்தும் செல்லும் வழித்தடப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பயணிகளுக்குத் தேவையான தற்காலிக நிழற்குடை, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் தற்காலிக பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜார்க்கண்டில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
மே 10 காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்பு விழா நடைபெறுவது ஏன் தெரியுமா?

தமிழக முதல்வர் விஜய்! ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!

ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: பட்டினப்பாக்கம் திரும்பிய விஜய்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
