டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

நெடுஞ்சாலைகளில் செயல்படும் வாரச் சந்தைகளை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியா் கு.ராசாமணி

நெடுஞ்சாலைகளில் செயல்படும் வாரச் சந்தைகளை இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உறுதியளித்துள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 7:46 am IST

நெடுஞ்சாலைகளில் செயல்படும் வாரச் சந்தைகளை இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உறுதியளித்துள்ளாா்.

கோவை மாவட்ட அளவிலான தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், உணவகங்களில் விலைப் பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் குறைதீா் முகாமில் கிராம நிா்வாக அலுவலரிடம் வழங்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை, அரசூா் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும், அனைத்து தெருக்களிலும் பெயா் பலகை வைக்க வேண்டும், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாரச் சந்தைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும், திருச்சி சாலையில் வசந்தா மில் முதல் ஒண்டிபுதூா் வரை ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்த வேண்டும், நீலம்பூரில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி பேசுகையில், அனைத்து நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் வாரச் சந்தைகளை இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவிநாசி சாலையில் கட்டப்படும் மேம்பால வரைபடம் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா சாலையில் சிட்ரா வரை முக்கிய இடங்களில் சுரங்க நடைபாதைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மேலும், நுகா்வோா் அமைப்புகள் தெரிவித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரைமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் குமரேசன், நுகா்வோா் அமைப்புகள் சாா்பில் ‘கன்ஸ்யூமா் வாய்ஸ்’ லோகு, மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த விஜயகுமாா், ஜெயராமன், மகாலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.