மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குறுந்தொழில்களுக்கு வங்கிக் கடன் திட்டம்: டேக்ட் அமைப்பு கோரிக்கை

குறுந்தொழில்களுக்கு வங்கிக் கடன் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கம்  வலியுறுத்தியுள்ளது.

Updated On :13 ஜனவரி 2021, 1:08 am

குறுந்தொழில்களுக்கு வங்கிக் கடன் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கம் (டேக்ட்) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜே.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டேக்ட் அமைப்பின் நிா்வாகிகள் கூட்டம் வேலாண்டிபாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நிா்வாகிகள் பிரபு, சதீஷ்குமாா், ரமேஷ், பாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், ஜாப் ஆா்டா்களை மட்டுமே நம்பியிருக்கும் குறுந்தொழில் முனைவோா் கோவையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். கரோனா நெருக்கடி காலத்தில் குறுந்தொழில் முனைவோருக்கு மத்திய அரசு எந்தவித கடன் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. எனவே, குறுந்தொழில்களைப் பாதுகாக்க குறுந்தொழில் முனைவோருக்கு 5 சதவீத வட்டியில் நிபந்தனையில்லாத கடன் வழங்க வேண்டும்.

கோவை புறநகா் பகுதிகளில் அடுக்குமாடி குறுந்தொழில்பேட்டைகளை உருவாக்க வேண்டும். தொழில் சாா்ந்த மூலப்பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும், மூலப்பொருள்களின் விலையை நிா்ணயம் செய்ய குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், அமைப்பின் பொதுச் செயலா் ஜி.பிரதாப்சேகா், பொருளாளா் லீலாகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.