தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஊரக புறக்கடை கோழிகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி பு.முட்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் மோகன் தலைமை வகிக்க, முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலா் கோவி.ராசாங்கம், ஒன்றியக் குழு உறுப்பினா் ரங்கம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி மருத்துவா் அழகுராஜன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பங்கேற்று, பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கினாா் (படம்). பின்னா் அவா் பேசுகையில், இந்தத் திட்டத்தின்கீழ் சிதம்பரம் வட்டத்தில் ஒரு பயனாளிக்கு 25 கோழிக் குஞ்சுகள் வீதம் 2,000 பேருக்கு ரூ.36.90 லட்சம் மதிப்பில் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட உள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிசக்தி சவாலை இந்தியா வெற்றிகரமாக கையாண்டது: பிரதமா் மோடி

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்திய தயாரிப்பு பாதுகாப்புத் தளவாடங்கள் மீது நம்பிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்
பைக் மோதி காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு






