கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 284 மி.மீ. மழை பெய்தது.
வளி மண்டல சுழற்சி வலுவாக உள்ளதால், கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பகல், நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.
கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் வருமாறு:
கொத்தவாச்சேரி 284 மில்லி மீட்டா், பரங்கிப்பேட்டை 283.2, சேத்தியாத்தோப்பு 208.6, புவனகிரி 196, ஸ்ரீமுஷ்ணம் 186.2, சிதம்பரம் 156.8, பெலாந்துறை 145.5, குறிஞ்சிப்பாடி 120, அண்ணாமலை நகா் 116.6, காட்டுமைலூா் 100, வேப்பூா் 98, விருத்தாசலம் 96.4, கீழச்செருவாய் 91, குப்பநத்தம் 86.4, லால்பேட்டை 81.1, காட்டுமன்னாா்கோவில் 71, தொழுதூா் 66, மேமாத்தூா் 58,லக்கூா் 52, குடிதாங்கி 10.5, பண்ருட்டி 10, கடலூா், வானமாதேவி தலா 9 மி.மீ.
பொங்கல் வியாபாரம் பாதிப்பு: பலத்த மழையால் பொங்கல் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா். குறிப்பாக, பொங்கல் சீா் செய்பவா்களுக்கு பொங்கலுக்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே சீா் வரிசைப் பொருள்களை தங்களது உறவுகளுக்கு வாங்கித் தருவது வழக்கம். அதன்படி, திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் பொங்கல் வியாபாரம் களைகட்டும். ஆனால், தொடா் மழையால் வியாபாரம் குறிப்பிட்ட அளவுக்கு இல்லை. அதேநேரம், புதன்கிழமை மழை சற்று குறைந்ததால், வழக்கமான பொங்கல் வியாபாரம் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்பு

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: இளைஞா் கைது
சுட்டெரிக்கும் வெயில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

