நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் 30 மரங்கள் சேதம்

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள் சேதமடைந்திருப்பதாக

Updated On :11 மே 2013, 12:15 pm IST

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள் சேதமடைந்திருப்பதாக போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கைதைக் கண்டித்து, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலையோர மரங்களை வெட்டியும், தீ வைத்தும் சேதப்படுத்தப்பட்டன.

மரங்கள் சேதம் குறித்த விவரம், சந்தேகப்படும் நபர்களின் பெயர், முகவரி குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தனித் தனியாக காவல் நிலையங்களில் புகார் செய்தனர்.

இந்தப் புகார்களின் மீது அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், அ.பள்ளிப்பட்டி, கோட்டப்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பாலங்கள் சேதம்:

வெதரம்பட்டி, தெத்துமுனியப்பன் கோயில், டி.ஆண்டியூர், டி.அம்மாபேட்டை, கர்த்தான்குளம் ஆகிய இடங்களில் உள்ள சிறுபாலங்கள், உயர்மட்ட பாலங்கள் சேதம் குறித்து நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த சாலை ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, செழியன் ஆகியோர் புகார் செய்தனர்.

இந்தப் புகார் மனுக்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுபாலங்கள், மரங்களின் சேத மதிப்பு ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என வருவாய்த் துறையினர் மதிப்பீடு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.