தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

அரூரில் 94 மி.மீ மழை பதிவு

அரூர் சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையானது 94 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 4:21 pm IST

அரூர்: அரூர் சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையானது 94 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. இந்த மழையானது அரூரில் 94 மில்லி மீட்டராகவும், பாப்பிரெட்டிப்பட்டியில் 48 மில்லி மீட்டராகவும் பதிவாகியுள்ளது. இதேபோல், தருமபுரியில் 17 மில்லி மீட்டர் மழையும், பாலக்கோட்டில் 28.3 மி.மீ., மாரண்டஹள்ளியில் 15 மி.மீ., பென்னாகரத்தில் 49 மி.மீ., ஒகேனக்கல்லில் 37 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த தொடர் மழையால் வயல்வெளிகள், சாலையோரங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

நெற்பயிர்கள் சேதம்:

கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் நடவு செய்திருந்தனர். இந்த நெற்கதிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. தற்போது தொடர்ந்து பெய்த மழையால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் வயல் வெளியில் சாய்ந்துள்ளன. தொடர் மழையால் விசாயிகள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், நெற்கதிர்கள் சாய்ந்து சேதம் அடைந்திருப்பதால் வேதனை அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.