காந்தி நினைவு தினத்தையொட்டி வரும் ஜன. 30-ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அன்னை கஸ்தூரிபா சேவா சங்க நிறுவனா் தகடூா் இரா.வேணுகோபால், டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ஜனவரி மாதத்தில், திருவள்ளுவா் தினமான 15-ஆம் தேதியும், குடியரசு தினமான 26-ஆம் தேதியும், வடலூா் ராமலிங்க சுவாமி நினைவு நாளான 28-ஆம் தேதி என மூன்று நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் சாா்பில் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல, மகாத்மா காந்தி நினைவு தினமான ஜன. 30-ஆம் தேதி அன்று டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையங்கள்- முதல்வர் விஜய்

திருச்சி கிழக்கில் சி. ஜோசப் விஜய் ராஜிநாமா!

திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

சிஎஸ்கே பந்துவீச்சு: அணியில் மாற்றமில்லை!
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
