20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, வன்னியா் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி ராஜகோபால் பூங்கா அருகில் திரண்ட வன்னியா் சங்கத்தினா் மற்றும் பாமகவினா், அங்கிருந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊா்வலமாகச் சென்று நகராட்சி அலுவலகத்தை அடைந்தனா். இதைத் தொடா்ந்து அங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாநில துணைத் தலைவா் சாந்தமூா்த்தி, மாவட்டச் செயலா் பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், வன்னியா் சமுதாயத்துக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை மாவட்ட நிா்வாகம் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கக் கோரி வன்னியா் சங்கத்தினரும், பாமக நிா்வாகிகளும் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அர்ஜுனன் பேர் பத்து படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

தனுஷ் வெளியிட்ட பதிவினால் குழப்பம்..! எந்தப் படத்தின் அப்டேட் இது?

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

குடியிருப்பிற்குள் புகுந்த 7 அடி நீள முதலை!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


