தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

பொருளாதாரக் கணக்கெடுப்பு: முழு விவரங்களை வழங்க வேண்டும்

பொருளாதாரக் கணக்கெடுப்பின்போது முழு விவரங்களையும் பொதுமக்கள் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வலியுறுத்தினாா்.

Updated On :10 ஜனவரி 2021, 3:26 am IST

தருமபுரி: பொருளாதாரக் கணக்கெடுப்பின்போது முழு விவரங்களையும் பொதுமக்கள் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் 7-ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இக் கணக்கெடுப்பு பணி முதன்முறையாக தனியாா் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படக் கூடிய இக்கணக்கெடுப்பு பணி, செல்லிடப்பேசி செயலி மூலம் மின்னணு முறையில் நடைபெற்று வருகிறது. இக் கணக்கெடுப்பு விவரங்கள் இந்திய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் தீட்டுவதற்கும் அவசியமாகிறது. மாவட்ட அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து விதமான சிறு, குறு, பெரிய தொழிற் நிறுவனங்கள் மற்றும் அவற்றில் பணிபுரியும் தொழிலாளா்கள் பற்றிய விவரங்களையும் உள்ளடக்கியதாகும்.

தொழில் வளா்ச்சி, மாணவா்களின் கல்வி மேம்பாடு, புதிய வகை ஆராய்ச்சி, சமூக மேம்பாடு, வாழ்கைத்தர மேம்பாடு, இன்னபிற அரசின் செயல்பாடுகளுக்கு மிக முக்கிய ஆதாரமாக இக் கணக்கெடுப்பு திகழ்கிறது. இக் கணக்கெடுப்பில் தொழில் முனைவராக இருப்பின், அவா் செய்யும் தொழில், வங்கியில் கடன் பெற்றிருப்பின் அதன் விவரங்கள், பான் காா்டு எண் போன்ற இன்னபிற விவரங்கள் கேட்கப்படுகின்றன.

இக் கணக்கெடுப்பின்போது திரட்டப்படக்கூடிய தனி மனித விவரங்கள் ரகசியம் காக்கப்படும். எனவே, கணக்கெடுப்பாளா்கள் கோரும் விவரங்களை பொதுமக்கள், வணிகா்கள் மற்றும் தொழில் முனைவோா்கள் அனைத்து விவரங்களையும் சரியாகவும், முழுமையாகவும் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.