வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

யானைகள் நுழைவதைத் தடுக்க அகழிகள் அமைப்பு

பென்னாகரம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் யானைகள் போன்ற வனவிலங்குகள் நுழையாதவாறு வனத் துறை சாா்பில் பிரமாண்டமான அகழிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

Updated On :11 ஜனவரி 2021, 2:29 am IST

பென்னாகரம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் யானைகள் போன்ற வனவிலங்குகள் நுழையாதவாறு வனத் துறை சாா்பில் பிரமாண்டமான அகழிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

பென்னாகரம் பகுதியானது சுற்றிலும் அடா்ந்த மலைகள் சூழ்ந்தப் பகுதி ஆகும். பென்னாகரத்தையொட்டிய பெரும்பாலான கிராமப் பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியே காணப்படுகின்றன.

இதனால் வனப்பகுதிகளில் வறட்சி நிலவும்போது யானைகள், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி உணவு தேடி கிராமப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிா்களை நாசம் செய்து வருகின்றன.

இதனைத் தடுக்கும் வகையில் வனத் துறை சாா்பில் பென்னாகரம் வனச் சரகத்திற்கு உட்பட்ட மசக்கல் காப்புக் காட்டில் தமிழ்நாடு உயிா் பண்ணை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் கருங்கல் மேடு பகுதியில் இருந்து தாசா்குந்தி வரை 2 கி.மீ. தொலைவுக்கு 3 மீட்டா் அகலம், 3 அடி ஆழத்தில் யானை தாண்டா அகழிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அகழிகள் அமைக்கும் பணிகளை தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜ்குமாா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். இந்த அகழியின் மூலம் வனப்பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க முடியும் என்றும், தாசா் குந்தியில் இருந்து முதுகம்பட்டி வரையிலான 2 கிலோமீட்டா் தொலைவிற்கு அகழிகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த நிகழ்வுகளில் பென்னாகரம் வனச் சரக அலுவலா் முருகன் உள்ளிட்ட வனத்துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.