நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கர்நாடக பேரவைத் தேர்தல்: ஆச்சரியமான மக்கள் தீர்ப்பு- முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி

சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அந்த மாநில முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி

Updated On :11 மே 2013, 12:15 pm IST

சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அந்த மாநில முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மைசூரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

உள்கட்சிப் பிரச்னையால் பாஜக தோல்வி அடைந்தது. ஆனால், அது இந்தளவிற்கு கட்சியைப் பாதித்துள்ளது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. வருகிற மக்களவைத் தேர்தலுக்குள் கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மாறாக, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவிற்கு எதிரான வாக்குகளே காங்கிரஸிற்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸிற்கு சாதகமான வாக்குகள் 2 சதம் மட்டுமே உயர்ந்தது. பாஜகவில் பிளவு ஏற்பட்டதால் காங்கிரஸ் வெற்றி அடைந்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் அலை எதுவும் அடிக்கவில்லை. புதிதாக பதவி ஏற்க உள்ள காங்கிரஸ் அரசு சிறப்பான ஆட்சியை வழங்குமா என்பது சந்தேகம்தான் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.