வடக்கு தில்லி புறநகர்ப் பகுதியில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முக்கிய மார்க்கெட்டுகளில் வாகன நிறுத்த மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஆஜாத் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:
வடக்கு தில்லி மாநகராட்சியில் புறநகர்ப் பகுதியில் பீதம்புரா, அவந்திகா, முகர்ஜி நகர், சிவா மார்க்கெட், ராணி பாக், ரோகிணி, மாடல் டவுன் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அதிகரித்து வருகின்றன.
கடைகளுக்கு வரும் மக்கள், சாலைகளில் வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க முக்கிய மார்க்கெட்டுகளில் வாகன நிறுத்த மையங்களை ஏற்படுத்த வடக்கு தில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பீதம்புரா வாகன நிறுத்த மையம் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ராணி பாகில் பல அடுக்கு வாகன நிறுத்த மையம் அமைக்கும் திட்டமும் உள்ளது.
ராணி பாகில் அமையும் வாகன நிறுத்த மையத்தில் 650 வாகனங்களை நிறுத்த முடியும். முகர்ஜி நகர், அவந்திகா பகுதிகளில் வாகன நிறுத்த மையம் அமைக்க டி.டி.ஏ.விடம் நிலம் கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றார் ஆஜாத் சிங்.
வடக்கு தில்லியின் முக்கிய மார்க்கெட்டுகளில் வாகன நிறுத்த மையங்கள் அமைக்க வேண்டும் என்று வணிகர்களும், வாடிக்கையாளர்களும் நீண்ட காலமாகக் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுதந்திர போராட்டத் தியாகியா உதயநிதி? அமைச்சர் ரமேஷ் கேள்வி

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


