மேற்கு வங் கத் தில் சட் டம் ஒழுங்கு அடி யோடு சீர் கு லைந் து விட் டது. எனவே மாநி லத் தின் நிலை மையை நேரில் மதிப் பிட்டு அம் மாநில அர சைப் பத வி நீக் கம் செய்து, குடி ய ர சுத் தலை வர் ஆட் சியை ஏற் ப டுத்த வேண் டு மென்று மத் திய அமைச் ச ரும் காங் கி ரஸ் கூட் ட ணிக் கட் சி யின் தலை வ ரு மான மம்தா பானர்ஜி மத் திய அர சுக்கு அழுத் தம் கொடுத் தார். இந்த வேண் டு கோளை ஏற்று மத் திய உள் துறை இணைச் செய லா ளர் வி.எஸ். சௌத்ரி தலை மை யில் மத் திய அதி கா ரி க ளைக் கொண்ட ஒரு குழு மேற்கு வங் கத் துக்கு அனுப் பப் பட்டு அங் குள்ள உயர் அதி கா ரி க ளை யும், அர சி யல் கட் சிப் பிர தி நி தி க ளை யும் சந் தித் துப் பேசி யது.
÷இப் பிரச்னை குறித்து நாடா ளு மன் றத் தில் எதிர்க் கட் சி கள் கடும் கண் ட னம் தெரி வித் துள் ளன. எதி ரும் புதி ரு மான பா.ஜ.க. இட து சா ரிக் கட் சி கள், சமா ஜ வாதி, பகு ஜன் சமாஜ் கட்சி ஆகி யவை இணைந்து நின்று மத் திய அர சின் இச் செ ய லுக் குக் கடும் எதிர்ப் புத் தெரி வித் துள் ளன.
÷மத் திய உள் துறை அமைச் சர் ப.சிதம் ப ரம் எதிர்க் கட் சி க ளின் கண் ட னத் துக் குப் பதி ல ளிக் கும் போது, மத் திய அர சின் குழு அனுப் பும் முடிவு, மாநில அர சு டன் மோத வேண் டும் என்ற நோக் கில் எடுக் கப் பட் ட தல்ல. இதை 356-வது விதி என்ற கண் ணாடி வழி யா கப் பார்க் கத் தேவை யில்லை என்று கூறி யி ருப் பது, தேங் காய் திருட தென்னை மரத் தில் ஏறி ய வனை தோட் டக் கா ரன் கண் டு பி டித் த வு டன் புல் பறிக்க மர மே றி ய தா கப் பசப் பிய கதை தான் நினை வுக்கு வரு கி றது.
÷சி றந்த வழக் க றி ஞ ரான சிதம் ப ரம் அர சி யல் சட் டத் தின் பிரி வு கள் என்ன கூறு கின் றன என் பதை அறி யா மல் இருக்க முடி யாது. சட் டம் ஒழுங் குப் பிரச்னை என் பது மாநில அர சு க ளின் கட் டுப் பாட் டுக்கு உள் பட்ட ஒன் றா கும். ஒரு மாநி லத் தில் சட் டம் ஒழுங்கு சீர் கெட் டு விட் டது என்ற குற் றச் சாட்டு எழு மா னால் மத் திய அரசு என்ன செய் ய வேண் டும் என் பதை அர சி யல் சட் டம் தெளி வா கக் கூறு கி றது. அர சி யல் சட் டத் தின் 163, 164, 356-வது பிரி வு கள் மத் திய, மாநில உற வில் முக் கி யப் பங்கு வகிக் கின் றன.
÷ஒரு மாநி லத் தில் சட் டம் ஒழுங்கு சீர் கெட் ட தா கப் புகார் செய் யப் ப டு மா னால், மத் திய அரசு உட ன டி யாக அந்த மாநில அர சி டம் விளக் கம் கேட்க வேண் டும். அவ் வாறு செய் வ தற்கு மாநில அரசு மறுக் கு மா னால், அர சி யல் சட் டம் வழங் கி யி ருக் கிற 257(1) பிரி வின் படி மாநில அரசு என் னென்ன செய்ய வேண் டும் என் ப தற் கான ஆணை களை மத் திய அரசு பிறப் பிக்க வேண் டும். அந்த ஆணை க ளை யும் மாநில அரசு புறக் க ணிக் கு மா னால், அங்கு குடி ய ர சுத் தலை வர் ஆட்சி குறித்து மத் திய அரசு யோசிக்க வேண் டும். அதன் பின் னரே 356-வது பிரி வின் கீழ் மாநில அர சைப் பதவி நீக் கம் செய் யும் நட வ டிக் கையை மேற் கொள்ள வேண் டும்.
÷அ ர சி யல் சட் டம் வகுக் கப் பட்ட காலத் தில் அர சி யல் நிர் ணய சபை யில் இப் பிரச்னை குறித்து விரி வான- ஆழ மான விவா தங் கள் நடை பெற் றுள் ளன. 1949-ம் ஆண்டு மே 31-ம் தேதி அர சி யல் சட் டத் தின் 356-வது பிரிவு கு றித்து விவா தம் நடை பெற் ற போது, மத் திய சட்ட அமைச் சர் அம் பேத் கர் பின் வ ரு மாறு குறிப் பிட் டார்:
மாநில அர சு க ளுக்கு அர சி யல் சட் டம் வகுத் துத் தந் துள்ள விதி மு றை க ளுக்கு மாறாக அந்த அர சு கள் செயல் ப டு மா னால் மத் திய அரசு தலை யி டும் நிலை உரு வா கி றது. ஆனால் மாநி லத் தில் நல்ல அரசு செயல் ப டு கி றதா இல் லையா என் பதை நிர் ண யிப் பது மத் திய அர சின் வேலை அல்ல. இந்த விஷ யத் தில் நான் மிகத் தெளி வா கவே இருக் கி றேன். இந் தச் சட் டப் பி ரிவு செயல் ப டாத செத்த பிரி வா கவே இருக் கும். எனி னும் இந் தச் சட் டப் பி ரி வைச் செயல் ப டுத்த வேண் டிய நிலை ஏற் பட் டால் மாநில ஆட் சி யைக் கலைப் ப தற்கு முன் பாக குடி ய ர சுத் தலை வர் முன் னெச் ச ரிக் கை யான நட வ டிக் கை களை மேற் கொள்ள வேண் டும்.
முத லா வ தாக அர சி யல் சட் டம் வகுத் துத் தந்த வழிப் பி ர கா ரம் நடக் கு மாறு தவறு செய் யும் மாநி லத் துக்கு எச் ச ரிக்கை விட வேண் டும். அந்த எச் ச ரிக்கை உரிய பயனை அளிக் கா மல் போகு மா னால், அந்த மாநில மக் களே தங் கள் விவ கா ரங் க ளைத் தீர்த் துக் கொள் ளும் வகை யில் மாநி லச் சட் ட மன் றத் தேர் த லுக்கு உத் த ர விட வேண் டும். மேற் கண்ட இரண்டு பரி கா ரங் க ளும் தோல் வி ய டை யு மா னால் மட் டுமே 356-வது சட் டப் பி ரி வைப் பயன் ப டுத்த வேண் டும்.
÷மா நி லங் கள் மீது மத் திய அரசு ஆதிக் கம் செலுத் தக் கூ டிய பல் வேறு சட் டப் பி ரி வு கள் நமது அர சி யல் சட் டத் தில் இடம் பெற் றி ருந்த போதி லும், நமது அர சி யல் அமைப்பு, கூட் டாட்சி அமைப் பா கும். அதா வது மத் திய அர சுக்கு என்று ஒதுக் கப் பட்ட துறை க ளில் மத் திய அர சுக்கு எவ் வ ளவு சுய ஆ திக் கம் உண்டோ அதைப் போல மாநி லங் க ளுக் கென்று ஒதுக் கப் பட்ட துறை க ளில் மாநி லங் க ளுக்கு சுய ஆ திக் கம் உண்டு. கூட் டாட் சித் தத் து வத் தின் அடிப் ப டைக் கொள்கை என் பது மத் திய, மாநில அர சு க ளுக்கு இடையே சட் டம் இயற் றும் நிர் வாக அதி கா ரங் க ளைப் பகிர்ந்து தரு வ தா கும்.
இது மத் திய அரசு இயற் றும் சட் டத் தின் மூலம் அல் லது அர சி யல் சட் டத் தின் மூலமே வகை செய் யப் ப டு கி றது. நமது அர சி ய ல மைப் பின் படி மாநி லங் கள் சட் டம் இயற் றும் அல் லது நிர் வாக அதி கா ரங் க ளுக்கு மத் திய அர சைச் சார்ந் தி ருக் க வில்லை. இந்த விஷ யத் தில் மாநில அர சும், மத் திய அர சும் சரி ச ம மான அதி கா ரங் கள் படைத் தவை.
÷1951-ம் ஆண் டில் முதல் முத லாக பஞ் சாப் மாநில அரசு பதவி நீக் கம் செய் யப் பட்டு அங்கு குடி ய ர சுத் தலை வர் ஆட்சி நிறு வப் பட் டது. அதற் குப் பிறகு 100 தட வை க ளுக்கு மேல் இந் தி யா வின் எல்லா மாநி லங் க ளி லும் மத் திய அரசு இத் த கைய ஜன நா யக விரோத நட வ டிக் கை களை மேற் கொண் டது. எல்லா கட் சி க ளுக் கும் இதில் பங்கு உண்டு. 1977-ம் ஆண் டில் ஜனதா கட்சி மத் தி யில் ஆட் சிப் பொறுப் பேற் ற போது 9 மாநி லங் க ளில் இருந்த காங் கி ரஸ் அர சு கள் பதவி நீக் கம் செய் யப் பட் டன. 1980-ம் ஆண்டு மீண் டும் காங் கி ரஸ் ஆட்சி ஏற் பட் ட போது 9 மாநி லங் க ளில் இருந்த ஜனதா கட்சி அர சு கள் பதவி நீக் கம் செய் யப் பட் டன. ஆனால் அப் போது மாநி லங் க ள வை யில் எதிர்க் கட் சி கள் பெரும் பான் மை யாக இருந்த கார ணத் தால் இந் தப் பதவி நீக் கத்தை ஏற் ப தற்கு அது மறுத் து விட் டது. ஆனால் 1994-ம் ஆண் டில் கர் நா டக மாநில முத ல மைச் ச ராக இருந்த எஸ்.ஆர். பொம் மை யின் அரசு பதவி நீக் கம் செய் யப் பட் ட போது, இந் திய உச்ச நீதி மன் றத் தில் 9 பேர் க ளைக் கொண்ட நீதி ப தி க ளின் ஆயம் தலை யிட்டு உன் ன த மான ஒரு தீர்ப்பை வழங் கி யது.
÷இந்த ஆயத் தில் ஒரு வ ரான நீதி பதி கே. ராம சாமி பின் வ ரு மாறு குறிப் பிட் டார்:
நமது அர சி யல் சட் டம் கூட் டாட் சித் தத் து வத்தை தன் னு டைய அடிப் படை அம் ச மா கக் கொண் டி ருக் கி றது. அது ஒரு போ தும் அழிக் கப் பட முடி யா தது.
மற் றொரு நீதி ப தி யான குல் தீப் சிங் கூறு கை யில்: மாநி லங் கள் சுதந் தி ர மா ன தும் தனித் தன்மை வாய்ந் த து மான அர சி யல் சட்ட ரீதி யான நிலை யைக் கொண் டி ருக் கின் றன. நாட் டின் அர சி யல், சமு தா யம், கல்வி போன்ற துறை க ளில் மத் திய அர சைப் போலவே மாநில அர சு க ளுக் கும் முக் கி யப் பங் க ளிப்பு உண்டு. மத் திய ஆட் சி யின் ஏஜெண் டு க ளா கவோ அல் லது அதைச் சார்ந்து நிற் க வேண் டிய நிலை யி லேயோ மாநில ஆட் சி கள் இல்லை.÷ ÷மற் றொரு நீதி ப தி யான ரத் தி ன வேல் பாண் டி யன் கூறு கை யில்: 356-வது சட் டப் பி ரிவு அபூர் வ மா கவே பயன் ப டுத் தப் பட வேண் டும். அர சி யல் சட்ட அமைப் பின் படி மத் திய, மாநில அர சு க ளுக் கி டையே நில வும் உற வைச் சீர் கு லைக் கும் வகை யில் இந் தப் பிரிவை அடிக் கடி பயன் ப டுத் தக் கூடாது. அவ் வாறு இந் தப் பிரிவு பயன் ப டுத் தப் ப டு மா னால், மாநில முத ல மைச் சர் தன் னு டைய அர சி யல் ரீதி யான கட மை க ளைச் சரி வ ரச் செய்ய முடி யாது. தான் தொடர்ந்து பத வி யில் இருக்க முடி யுமா முடி யாதா என்ற அச் சத் தின் கீழ் அவர் இயங்க வேண் டிய நிலைமை ஏற் பட் டால் மாநி லத் தின் நலன் கள் பெரு ம ளவு பாதிக் கப் பட் டு வி டும் என்று நீதி ப தி கள் குறிப் பிட் ட னர்.
÷உச்ச நீதி மன்ற நீதி ப தி கள் 9 பேரைக் கொண்ட ஆயம் அளித்த இந் தத் தீர்ப்பு என் பது, மத் திய ஆட் சிப் பொறுப் பில் இருப் ப வர் க ளுக்கு விடப் பட்ட எச் ச ரிக் கை யா கும்.
1980-களில் மத் திய, மாநில உறவு பற்றி ஆராய பிர த மர் இந் திரா காந் தி யால் அமைக் கப் பட்ட சர்க் கா ரியா ஆணை யம் தன் னு டைய அறிக் கை யில் பின் வ ரு மாறு திட் ட வட் ட மா கக் கூறி யி ருக் கி றது:
மிக மோச மான சூழ் நி லை யில் வேறு வ ழியே இல் லா த போ தும், மற்ற வேறு வகை யான முயற் சி கள் அனைத் தும் தோற் றுப் போ ன போ தும், அந்த மாநி லத் தில் சீர் கு லைந்த சட் டம் ஒழுங் கைத் திருத் தும் நோக் கத் து டன் 356-வது பிரிவு மிக மிக அபூர் வ மா கப் பயன் ப டுத் தப் பட வேண் டும். இவ் வாறு செய் வ தற்கு முன் னால் அந்த மாநி லத் தில் எழுந் துள்ள பிரச் னை யைத் தீர்ப் ப தற்கு சகல வித மான முயற் சி க ளும் மேற் கொள் ளப் பட வேண் டும். தவறு செய் யும் மாநில அர சுக்கு எச் ச ரிக்கை விடப் ப ட வேண் டும். 356-வது பிரி வின் படி நட வ டிக்கை எடுப் ப தற்கு முன், மாநில அரசு அளிக் கும் விளக் கத்தை மிகக் கவ ன மு டன் பரி சீ லனை செய்ய வேண் டும். இவ் வா றெல் லாம் செய் யா மல் மாநில அர சைப் பத வி நீக் கம் செய் வ தென் பது சரி யா னது அல்ல.
உல கத் தின் பல் வேறு கூட் டாட்சி முறை உள்ள நாடு க ளின் அர சி யல் சட் டத் தில் இத் த கைய சட் டப் பி ரிவு என் பது இல் லவே இல்லை. எனவே இச் சட் டப் பி ரிவை அடி யோடு நீக் கு வது பற்றி ஆரா ய வேண் டிய கட் டம் வந் து விட் டது.
அர சி யல் சட் டம் உரு வாக் கப் பட்ட கால கட் டத் தில் இருந்த இந் தி யா வின் நிலைமை முற் றி லு மாக மாறி யி ருக் கி றது. அப் போது காங் கி ரஸ் கட்சி ஒன்றே வலிமை வாய்ந்த கட் சி யா கத் திகழ்ந் தது. 1947-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை சுமார் 20 ஆண் டு கள் மத் தி யி லும், மாநி லத் தி லும் காங் கி ரஸ் கட் சியே ஆட்சி நடத் தி யது. சுதந் தி ரப் போராட் டத் தில் முன் ன ணி யில் நின்று தலைமை தாங் கிப் போரா டிய பல தலை வர் கள் மத் தி யி லும், மாநி லத் தி லும் ஆட் சிப் பொறுப் பு க ளில் இருந் தார் கள். எனவே மத் திய, மாநில அர சு க ளுக் கி டையே பிரச் னை கள் எழும் போது அவற் றைக் கட்சி மட் டத் தி லும் ஆட்சி மட் டத் தி லும் சுமு க மா கத் தீர்த் துக் கொண் டார் கள்.
ஆனால் 1967-ம் ஆண் டுக் குப் பிறகு கொஞ் சம் கொஞ் ச மாக நிலைமை மாறி மத் தி யில் ஒரு கட் சி யும் மாநி லங் க ளில் வெவ் வேறு கட் சி க ளும் ஆட் சிப் பொறுப் பு களை ஏற் கும் நிலை வந் து விட் டது. இந்த நிலை மை யி லும் ஒரு பெரும் மாற் றம் ஏற் பட்டு மத் தி யில் எந் த வொரு கட் சி யும் ஆட்சி செய் ய மு டி யா மல் பல் வேறு மாநி லக் கட் சி க ளின் உத வி யோடு கூட் டணி ஆட் சியை நடத் தும் நிலை மிகத் தெளி வாக உரு வா கி விட் டது.
இனி எந் தக் காலத் தி லும் ஒரு கட் சி யின் ஆட்சி என் பது மத் திய அர சில் ஏற் ப டப் போவ தில்லை. எனவே மத் திய, மாநில அர சு க ளுக் கி டையே மோத லற்ற போக்கு ஏற் ப டு வது நாட் டின் வளர்ச் சிக்கு உத வும்; இல் லை யென் றால் வளர்ச்சி திட் ட வட் ட மா கப் பாதிக் கப் ப டும்.
÷நாட் டின் பல் வேறு பகு தி க ளி லும் சீரற்ற வளர்ச் சிப் போக் கு கள் இருப் பது மோதல் களை அதி க மாக் கு வ தற்கே வழி வ குக் கும். மாநில உரி மை களை வலி யு றுத்தி காங் கி ரஸ் அல் லாத கட் சி கள் நடத் தும் போராட் டம் என் பது மத் திய அர சின் அதி கா ரங் க ளுக்கு அறை கூ வல் விடு வ தில் போய் முடி யும்.
இந் தி யா வைச் சுற் றி யுள்ள பல் வேறு நாடு க ளில் ஜன நா ய கம் சீர ழிக் கப் பட்டு சர் வா தி கார ஆட்சி முறை கள் நிலவி வரும் போது இந் தி யா வி லும் அத் த கைய நிலைமை வந் து வி டக் கூடாது. மாநி லங் க ளின் உரி மை களை நிலை நாட் டும் வகை யி லும் உண் மை யான கூட் டாட்சி மல ரும் வகை யி லும் நமது அர சி யல் சட் டம் திருத் தி ய மைக் கப் பட வேண் டிய கால கட் டம் பிறந் து விட் டது. இந்த உண் மையை மத் திய ஆட் சிப் பொறுப் பில் இருப் ப வர் கள் உண ர வேண் டும். இல் லை யென் றால் வேண் டாத விளை வு கள் ஏற் ப டும் என் ப தில் சந் தே க மில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.