விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுவை விலக்குவோம்

அண்மைக்காலமாக பூரண மதுவிலக்கு என்ற குரல் தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதுமே ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. அண்டை மாநிலமான கேரளத்தில், அரசு மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முடிவெடுத்துள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2014, 7:51 pm

வை. இராமச்சந்திரன்

அண்மைக்காலமாக பூரண மதுவிலக்கு என்ற குரல் தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதுமே ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. அண்டை மாநிலமான கேரளத்தில், அரசு மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முடிவெடுத்துள்ளது.

குஜராத், நாகாலாந்து, மிúஸாரம் ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளன.

தமிழகத்திலோ ஆண்டுதோறும் மதுவிற்பனை இலக்கு வைத்து விற்கப்படுவதோடு, விற்பனையில் சாதனையும் படைத்து வருகிறது.

"சரக்கு' என்பதற்கு அர்த்தமே மாறிவிட்டது. முன்பு பலசரக்கு கடைக்காரர்கள் பொருள்கள் வாங்கச் செல்வதை சரக்கு வாங்கச் செல்வதாகக் கூறுவார்கள். சலூன் கடைக்குச் சென்றால் கட்டிங்கா? ஷேவிங்கா? என்பார்கள்.

இப்போது "சரக்கு' என்ற சொல்லையும், "கட்டிங்' என்ற சொல்லையும் உச்சரித்தாலே அது மதுவைக் குறிப்பதாக ஆகிவிடுகிறது.

காதலில் தோல்வி, உடல்வலி, மன அழுத்தம், கடன் பிரச்னை முதலிய காரணங்களுக்காக பலரும் குடிப்பதுண்டு. ஆனால், அவர்கள் எல்லாம் குடிப்பதை மறைமுகமாக வைத்திருந்தனர்.

ஆனால், தற்போது அப்படி இல்லை. மகிழ்ச்சியோ, துக்கமோ எதுவாக இருந்தாலும் மது முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுவயதினர் முதல் பெரியவர்கள் வரை எவ்வித கூச்சமோ, அச்சமோ இன்றி திறந்தவெளியிலேயே குடிக்கின்றனர்.

ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் மதுப்பழக்கம் உள்ளவர்கள் ஒதுக்கப்படும் நிலை மாறி, அப்பழக்கம் இல்லாதவர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலை தற்போது உள்ளது.

தமிழர்களிடையே மது கலாசாரம் அதிகரித்து வருகிறது. எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் மது இருந்தால் மட்டுமே உற்சாகம் காணப்படுகிறது.

பெற்ற பிள்ளைகளை, கட்டிய கணவனைப் பெண்கள் கட்டுப்படுத்த முடிவதில்லை. மாறாக, யார்தான் குடிக்காமல் இருக்கிறார்கள் என தங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொள்கிறார்கள்.

காரணம், தொலைக்காட்சிகளில் வரும் தொடர்களில் மது குடிப்பது போன்ற காட்சி அமைப்புகள் வருவது அவர்களை இந்த அளவுக்கு சாதாரணமாக எடுத்துக்கொள்ளச் செய்துள்ளது.

விளைவு? தமிழகத்தின் பல பகுதிகளிலும் 25 முதல் 35 வயதுக்குள் இளம் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழிப்பறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, சமூக விரோதச் செயல்கள் என அனைத்து குற்றப்பின்னணியிலும் மது முக்கிய பங்கு வகிக்கிறது.

சாலை விபத்துகள் அதிகரிக்க மதுவே முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. குடும்பத் தலைவரை இழக்கும் பெண்கள் குடும்பத்தைக் காப்பாற்ற, சமூகத்தில் எத்தனையோ அவமானங்களைச் சந்திக்கின்றனர்.

மதுப்பழக்கம் உள்ள இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். நாம் இல்லாத இந்த உலகத்தில் நம் மனைவி சந்திக்கப் போகும் பிரச்னைகள்; நம் குழந்தைகள் விரும்பும் கல்வி கிடைக்காத சூழல்; நம் குழந்தைகள் தொழிலாளர்கள் ஆகும் நிலை என எத்தனை எத்தனையோ பிரச்னைகள்.

தன் கண் முன்னால் தன் வீட்டுப் பெண்களைத் தெரியாமல் ஒருவர் உரசி விட்டால் கூட கொதித்து எழுபவர்கள், தனது இறப்புக்குப் பின்னர் தன் வீட்டுப் பெண்கள் சந்திக்கப் போகும் பிரச்னைகளை ஒரு நிமிடம் மனதில் அசை போட்டுப் பார்த்தாலே மதுவின் பிடியிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள்.

அரசுக்கு வருவாயைப் பெருக்க எத்தனையோ வழிகள் உள்ளன.

இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதுவிலக்கு கொண்டு வரப்படுவதை விரும்பாது. மதுக்கடைகள் மூலம் அரசுக்கு வருவாய் வருவதை மட்டுமே கருத்தில்கொள்ளும்.

மத்திய அரசு தேசிய அளவில் மதுவிலக்குக் கொள்கையை அறிவிக்க வேண்டும். அதோடு மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும்.

உடனடியாக இயலாவிட்டாலும் கேரளம் போல தமிழக அரசும் படிப்படியாகவாவது மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.