போராளிகளா? தீவிரவாதிகளா?

உலக அளவில் தீவிரவாதிகளும், போராளிகளும் உருவாகிக் கொண்டேதான் இருக்கின்றனர். ஆனால், இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.

உலக அளவில் தீவிரவாதிகளும், போராளிகளும் உருவாகிக் கொண்டேதான் இருக்கின்றனர். ஆனால், இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. இப்போது இராக்கில் நடைபெறும் உள்நாட்டுப் போரை கூர்ந்து கவனித்தால் அதன் தன்மையை அறியலாம்.

இராக்கில் உள்நாட்டுப் போர் அரசுக்கும், இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்ட் அல்-ஷாம் (ஐ.எஸ்.ஐ.எஸ்.) என்ற முஸ்லிம் அமைப்புக்கும் இடையே நடந்து வருகிறது.

அந்நாட்டு அதிபர் ஜலால் தலபானி, ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். எதிர்த்துப் போராடும் கலவரக்காரர்களோ, சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஏன் இந்தப் போர்..? அந்நாட்டு அரசு இஸ்லாம் சட்ட மரபை மீறி செயல்படுவதாக செய்தி...!

யூத இஸ்லாமிய சமயம் 17ஆம் நூற்றாண்டில் கிரீஸ் பகுதியில் ஷா பெட்டாய் ட்ùஸளவியால் நிறுவபட்டது. இவரைத் தொடர்ந்து முஸ்தபா கமால் அதாதூர்க் (கி.பி. 1881-1938) யூதராக இருந்து ஆட்சி அதிகாரத்திற்காக முஸ்லிமாக மாறினார்.

அப்போது துருக்கியை ஆட்சி செய்த இஸ்லாமியரான உஸ்மானியா கிலாஃபத்தை வீழ்த்தியதில் முஸ்தபா கமால் அதாதூர்க்கு பங்கு உண்டு. இவர் ஜமாஅத் எனும் அமைப்பை உருவாக்கி கிலாஃபத்திற்கு எதிராகப் புரட்சி மேற்கொண்டார்.

துருக்கியின் ராணுவ ஜெனரலாக இருந்து தேசியக் கட்சியின் தலைவரானார். பின்னர் 1923இல் துருக்கியின் அதிபரானர். இஸ்லாமிய ஆட்சி முறையை அகற்றிவிட்டு சமயம் வேறு, ஆட்சி வேறு என்று பிரித்து ஆளுமை செய்தார். அரபிய மொழி நாடான துருக்கியை 1928இல் லத்தீன் மொழிக்கு மாற்றினார்.

அரபிய கல்வி நிலையங்களை மூடியதால் துருக்கியரின் பாரம்பரிய இஸ்லாமியத் தொடர்பு மறைந்து போனது. ஷரியத் சட்டம், நீதிமன்றங்கள், வக்ஃபு அமைச்சகங்கள் மூடப்பட்டன.

இதையடுத்து, துருக்கியில் ஐரோப்பிய சட்டங்கள், ஸ்விட்சர்லாந்து குடியுரிமை சட்டம், இத்தாலியின் குற்றவியல் சட்டங்கள், ஜெர்மனியின் வர்த்தக சட்டங்கள் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. 1925இல் பள்ளி வாசல்கள் அருங்காட்சியமாக மாற்றப்பட்டன; ஹிஜ்ரி காலண்டர் முறை அகற்றப்பட்டு ஆங்கிலேய நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, துருக்கி அரசியல் சாசனத்திலிருந்து இஸ்லாமிய சட்டப் பிரிவு நீக்கப்பட்டது. பெண்களின் பர்தா முறை அகற்றப்பட்டது.

இஸ்லாத்தின் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்று முஸ்தபா கமால் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவருக்கு பின் வந்த தலைவர்கள், அதிபர்கள் முஸ்தபா கமால் கொள்கையையே பின் பற்றினார்கள். இதுவே முஸ்லிம் பழைமைவாதிகளுக்குத் தூண்டுகோலாய் அமைந்து, உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகள் என்றால் பக்கத்து நாடுகளில் உள்நாட்டுக் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே. வெடிகுண்டு அசம்பாவிதங்கள் போன்றவற்றிலும் ஈடுபட்டிருக்க வேண்டும்.

பிற பயங்கரவாத அமைப்புகளான அல் -கொய்தா, தலிபான் போன்ற அமைப்புகள் துருக்கி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், ஏன் இந்தியாவில்கூட அவ்வப்போது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்போ அவர்களைப் போல அல்லாமல், தங்கள் நாட்டில் மதக் கலாசாரம் கெட்டுப் போகக் கூடாது என்று போராடி வருகின்றனர்.

இவர்கள் பயங்கரவாத இயக்கத்தினராக இருந்தால், இராக்கில் தாங்கள் ஆக்கிரமித்த பகுதியில் இருந்த மற்ற நாடுகளின் கூலித் தொழிலாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை பணயக் கைதிகளாக வைத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லையே..!

இந்தியாவிலிருந்து வேலைக்காக அங்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரிடம் சிக்கி, பின்னர் நாடு திரும்பிய செவிலியர்கள், "நாங்கள் பாதுகாப்புடன்தான் இருந்தோம்; ஆனால், வெளியில்தான் செல்ல முடியாமல் இருந்தது' என்று கூறியதிலிருந்து இதை அறியலாம்.

இராக்கிலிருந்து 46 செவிலியர்கள் உள்பட 137 தொழிலாளர்கள் முதல் கட்டமாக இந்தியா வந்துள்ளனர். அங்கு கூலி வேலையில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேலானோர் இதுவரை இந்தியா திரும்பி உள்ளனர்.

மேலும், பல தொழிலாளர்கள் இந்தியா வருவதற்குக் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்கள் அந்த இயக்கம் சார்ந்தவர்களைப் போராளிகள் என்று கூறுவார்கள். ஆனால், அந்த இயக்கத்தின் எதிர்ப்பாளர்களோ அவர்களைத் தீவிரவாதிகள் என்று கூறுவார்கள்.

ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர், தங்கள் நாட்டில் இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் போராடுகின்றனர்.

இவர்களைப் போராளிகள் என்பதா? தீவிரவாதிகள் என்பதா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com