இது தங்கமான நேரமா?
கடந்த 2007-2008-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் வீட்டு அடமானச் சந்தையில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி, உலக நாடுகள் பெரும்பாலானவற்றை புரட்டிப் போட்டது நினைவிருக்கலாம்.


கடந்த 2007-2008-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் வீட்டு அடமானச் சந்தையில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி, உலக நாடுகள் பெரும்பாலானவற்றை புரட்டிப் போட்டது நினைவிருக்கலாம்.
அதைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பிய பிராந்தியத்திலும், உலக அளவிலும் பல்வேறு நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கின.
இதனால், மஞ்சள் உலோகம் என்று அனைவராலும் பெருமையுடன் அழைக்கப்படும் தங்கத்துக்கு மவுசும் கூடியது. தங்கத்தில் முதலீடுகள் வெகு வேகமாக அதிகரிக்கத் தொடங்கின. ஆன்-லைன் வர்த்தகமும் இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
இதன் காரணமாக, 2008-இல் தங்கத்தின் மீதான முதலீட்டில் லாபம் 25.95 சதவீதமாக உயர்ந்தது. 2009-இல் 22.77 சதவீதம், 2010-இல் 23.28 சதவீதம், 2011-இல் 32.12 சதவீதம் என லாபத்துக்கு மேல் லாபத்தை தங்கம் பெற்றுக் கொடுத்தது.
ஆனால், 2012-இல் அது மவுசை இழக்கத் தொடங்கியதால், அந்த ஆண்டில் தங்கம் கொடுத்த லாபம் 12.49 சதவீதமாகக் குறைந்தது. இருப்பினும் தங்கம் மேலும் விலை உயரும் என்று கருதி பலரும் அன்றையக் காலகட்டத்தில் முதலீட்டை அதிகரித்ததை மறப்பதற்கில்லை.
ஆனால், "மேலே செல்லும் எந்தப் பொருளும் கீழே விழுந்துதான் ஆக வேண்டும்' என்று "பாரம்பரிய ஞானம்' (பதஅஈஐபஐஞசஅக ரஐநஈஞங) கூறுகிறது. இதன்படி, நிறுவனப் பங்குகள்,கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி என வர்த்தகத்தில் உள்ள அனைத்தும் விலை குறைவது இயல்புதான்.
அதுபோல தங்கத்தின் விலையும் சரியத் தொடங்கியது. 2014-இல் அக்டோபர் 1-ஆம் தேதி நிலவரப்படி 6.28 சதவீதம் நஷ்டத்தைத் தந்துள்ளது.
அதாவது, விலை ஏற்றம் பெற முடியாமல் படிப்படியாகக் குறைந்துள்ளது எனலாம். இதற்கு உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையும் ஒரு காரணியாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் இரண்டு - மூன்று நாள்களில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.600 - ரூ.700 வரை குறைந்தது நினைவிருக்கலாம்.
மேலும், ஆபரணத் தங்கத்தின் விலையும் பவுனுக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் கீழ் குறையத் தொடங்கியது. அச்சமயத்தில், ஒரு பவுன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.19,000-க்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக மார்க்கெட் வல்லுநர்கள் தெரிவித்ததும் நினைவிருக்கலாம்.
எனவே, இந்த நேரத்தில் முதலீட்டு அடிப்படையில் தங்கத்தை வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் பலருக்கு ஏற்படுவதை மறுப்பதற்கில்லை.
ஆனால், பணத்தை முதலீட்டுக்குப் பயன்படுத்தும் போது, ஒரே திட்டத்தில் சேமிக்காமல் பல்வேறு திட்டங்களில் சேமிப்பை வலுப்படுத்தியிருந்தால் நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. மேலும், விலை குறைந்த நிலையில் முதலீடுகளை மேற்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்கின்றனர் அவர்கள்.
தங்கத்தை பொருத்தமட்டில், ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) அதிகபட்சமாக சுமார் 1,925 அமெரிக்க டாலர் வரை உயர்ந்தது. அதன்பிறகு சரிவைச் சந்தித்து இப்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1,200 - 1,210 அமெரிக்க டாலராக உள்ளது.
அதன் உற்பத்தி விலை ஒரு அவுன்ஸýக்கு 1050-1100 அமெரிக்க டாலராக இருப்பதாகவும், எனவே இதற்கும் மேல் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் மார்க்கெட் வல்லுநர்கள் தங்களது கணிப்பை வெளியிட்டு வருகின்றனர்.
தங்கத்தின் விலை வரும் மாதங்களில் பெரிய அளவில் ஏற்றமோ, இறக்கமோ காண்பது அரிதாகத்தான் இருக்கும். மாறாக, ஸ்திர நிலைமையை அடைய இன்னும் பல மாதங்களாகலாம். எனவே, பெரிய அளவில் சரிவைச் சந்திக்குமா என்பது கேள்விக்குறிதான்.
இதனால், இத்தருணத்தை முதலீட்டுக்குப் பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் யோசனை கூறத் தொடங்கியுள்ளனர்.
ஆபரணத் தங்கத்தை வாங்குவது எந்த வகையிலும் லாபமாக இருக்காது. வாங்கும் போது கூலி, சேதாரம் என்று 8 முதல் 20 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுக்க வேண்டி வரும்.
அதேபோல் விற்கும்போதும், சேதாரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகை கழிக்கப்படும். எனவே, தங்க முதலீட்டுக்கு வேறு பல வாய்ப்புகள் இப்போது உள்ளன.
அந்த வகையில், தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள், கோல்ட் இ.டி.எஃப். ஃபண்ட் (பேப்பர் கோல்ட்), இ-கோல்டு (ஆன்-லைன் வர்த்தகம்), கோல்ட் ஃபண்ட் (மியூச்சுவல் பண்ட்) உள்ளிட்டவற்றைச் சொல்லலாம்.
அண்மைக் காலமாக கோல்ட் இ.டி.எஃப். ஃபண்டில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதை வாங்குவதற்கும், விற்பதற்கும் ஆகும் செலவு மிகவும் குறைவு என்பதே இதற்குக் காரணம். பொறுத்தார் பூமி ஆள்வாரல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...