/

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2023, 4:36 pm

DIN

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கூடியது. 

இந்தக் கூட்டத்தில் நீண்ட காலம் நிலுவையில் இருந்த நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாளை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.