தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பராமரிப்பின்றி பாழாகும் காந்தி சிலை

 திருத்தணி, மே 9: திருத்தணி ம.பொ.சி. சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் பீடம் பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. மேலும் அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது.  திருத்தண

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:13 am

ஜி. யோகானந்தம்

 திருத்தணி, மே 9: திருத்தணி ம.பொ.சி. சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் பீடம் பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. மேலும் அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது.

 திருத்தணி ம.பொ.சி. சாலையில், கடந்த 1949-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி திருத்தணி பஸ் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டது.

 இச் சிலையை அப்போதைய பொதுப் பணித் துறை அமைச்சர் எம்.பக்தவச்சலம் திறந்து வைத்தார். பின்னர் 2009-ம் ஆண்டு திருத்தணி நகர காங்கிரஸ் மற்றும் வட்டார நாடார் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் திருஉருவ சிலைக்கு நிழற்குடை, சுற்றுச்சுவர், இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

 காந்தி ஜயந்தி மற்றும் விசேஷ நாள்களில் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளில் யாராவது சிலர் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 இந்த சிலை அருகேதான் காமராஜர் மார்க்கெட், பூ மார்க்கெட்டுக்கு வரும் இருசக்கர வாகனங்கள் தினமும் நிறுத்தப்படுகின்றன. இங்கு வாகனங்கள் நிறுத்தத் தடை விதித்திருந்தும்கூட யாரும் அதைப் பொருட்படுத்தாமல் மணிக்கணக்கில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

 போக்குவரத்து காவல்துறையினரும் இதை கண்டு கொள்வதாக தெரியவில்லை. மேலும் காந்திசிலையை சுற்றிலும் இருக்கும் பூ மார்க்கெட், பழவகைக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் சேரும் குப்பைகளை சிலையின் பின்புறம் கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

 ம.பொ.சி சாலையில் உள்ள இந்த காந்தி சிலை திருத்தணி நகரின் ஒரு முக்கிய அடையாளமாக விளங்குகிறது. ஊருக்கு அடையாளம் கொடுத்த இந்த காந்திசிலை கவனிப்பார் யாரும் இல்லாமல் பாழடைந்து வருகிறது. மேலும், சிலையை சுற்றிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி காந்தி சிலையை மறைத்துவிடுகின்றனர்.

 சிலையை சுற்றி கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அதிவேகமாக வந்த மர்ம கனகரக வாகனம் காந்திசிலை சுற்றுச்சுவர் மீது இடித்தது.

 இதில் சிலையின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுபோல் இரவு நேரங்களில் அடிக்கடி மோதும் வாகனங்களால் சிலை உடைந்து கீழே விழுந்து விடுமோ? என அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திருத்தணி காந்தி சிலையையும், அதன் சுற்றுச் சுவரையும் நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும்.

 காந்திசிலை சுற்றியும் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பூ மார்க்கெட், காய்கரி மார்க்கெட் பகுதியில் சேரும் குப்பைகளை சிலை அருகே கொட்டுவதை நகராட்சி நிர்வாகம் கண்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.