இந்நிலையில், நம்பிக்கைகொடுக்கும் விதமாக, கடந்த 17 ஆண்டுகளாக விவசாயப்பிரச்னைக்கு தீர்வுகாண முயன்று வரும் தமிழக தகவல் தொடர்பு தொழில்நுட்பக்குழு, ஆந்திர மாநிலத்தில் தாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்திய திட்டத்தின் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம், வேப்பங்குளம் பஞ்சாயத்தில் நீர் மேலாண்மை மற்றும் பயிர்மேலாண்மையை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது. மக்கள் நிதி பங்களிப்புடன் சுமார் ஐந்து லட்சம் ரூபாயில் நான்கு கண்மாய்களை (சுமார் 120 ஏக்க பரப்பளவு), அவற்றின் நீர்வரத்துக்களை (ஏழு நீர் வரத்துக்கால்வாய்கள், சுமார் பதினைந்து கிலோமீட்டர் நீளம்) சரி செய்து இருக்கின்றனர். கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் மழையளவு மிகக்குறைவாக இருந்தபோதிலும், பெய்த மழை முக்கால் கண்மாய்களை நிரப்பியது. விவசாய மேலாண்மை ஒருங்கிணைத்து சுமார் 250 ஏக்கரில் நெல் பயிரிட்டு வெற்றிகரமாக அறுவடை செய்திருக்கின்றது. ஐந்து லட்ச ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மை முயற்சியினால் இன்று வேப்பங்குளம் கிராமம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நெல் உற்பத்தி செய்த கிராமமாக மாறியிருக்கிறது. விரைவில் இது மூன்று கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்த முடியும் என்கிற நம்பிக்கையில் இருக்கின்றனர் கிராம மக்கள்.