கென்யா நைரோபியில் கல்வியாளராகவும், சமூக சிந்தனையாளராகவும் வளர்ந்த கபிலா, 1947-ஆம் ஆண்டு லண்டனுக்குச் சென்று படித்த முதல் இந்திய பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றார். இவரது தாத்தாதான் இவரை லண்டனுக்கு அனுப்பி படிக்க ஆர்வமூட்டினாராம். தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து போராடிய மகாத்மா காந்தி, இந்தியாவில் சுதந்திர போராட்டத்தை துவங்கி, சுதந்திரம் பெற்று தந்ததைத் தொடர்ந்து, கபிலாவுக்கு தாய் நாட்டின் மீது ஆர்வம் அதிகரித்தது. ஏற்கெனவே அடிக்கடி இந்தியாவுக்கு வந்து ஜமியாமிலியா இஸ்லாமிய கல்லூரியில் விரிவுரையாளராக பாடம் நடத்தி வந்த கபிலா, 1950-ஆம் ஆண்டு நிரந்தரமாக டெல்லியில் குடியேறியதோடு, 1961 -ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராகவும் பயிற்சி பெறத் தொடங்கினார்.