லோக்பால், லோக் ஆயுக்தா VS நம் நாடு, நாட்டு மக்கள்! 

நம்ம நாட்டுல ஒவ்வொரு குடிமகனுமே ஊழலை ஒழிக்கனும்னு தான் பேசிட்டே இருக்கோம். ஆனா.. ஊழலை ஒழிக்கனும்னா என்ன செய்யனும்கறது மட்டும் நமக்குத் தெரியாது.
லோக்பால், லோக் ஆயுக்தா VS நம் நாடு, நாட்டு மக்கள்! 



தினமும் நியூஸ் பார்க்கற வழக்கம் இருக்கா உங்களுக்கு? அப்படின்னா நிச்சயமா லோக்பால், லோக்ஆயுக்தா என்ற வார்த்தைகள் உங்கள் பரிச்சயமாகியிருக்கனும். ஆனா, என்ன ஒரு கொடுமைன்னா? வார்த்தைகள் பரிச்சயமான அளவுக்கு அந்த வார்த்தைகளுக்கான அர்த்தமும் அதன் தேவையும் யாருக்கும் புரியலைன்னு தான் தோணுது. இதோ இந்த விடியோ பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியக்கூடும்.

நம்ம நாட்டுல ஒவ்வொரு குடிமகனுமே ஊழலை ஒழிக்கனும்னு தான் பேசிட்டே இருக்கோம். ஆனா.. ஊழலை ஒழிக்கனும்னா என்ன செய்யனும்கறது மட்டும் நமக்குத் தெரியாது. யாராவது பாடுபட்டு போராடி ஊழலை ஒழிப்பு விசாரணை ஆணையம், அமைப்புன்னு எதையாவது கொண்டு வந்தாலும் அதைப்பத்தி முழுமையா தெரிஞ்சிகிட்டு அவங்களோட இணைந்து போராடி அதை நடைமுறைப்படுத்தற அளவுக்கு பொறுமை இல்லாம ஒரு பக்கம் ஊழலை ஒழிக்கனும்... ஒழிக்கனும்னு கோஷம் போட்டுக்கிட்டே மறுபக்கம் வீட்ல இழுத்துப் போர்த்திட்டு தூங்கிட்டு இருப்போம்... அல்லது லெளகீக வாழ்வின் எல்லைகளுக்குள் அடங்கி அமைதியின் திரு உருவங்களாக ஆகியிருப்போம். அப்பப்போ அவங்கவங்களுக்கு பர்சனலா பாதிப்பு வரும் போது மட்டும் அம்னீசியா பேஷண்டுகளைப் போல ஊழல் ஒழியனும், இந்த நாடே ஊழல் பெருச்சாளிகள் கிட்ட சிக்கித் திண்டாடுது. இந்த ஊழல் அரக்கனை ஒழிக்க யாருமே இல்லையான்னு நீலிக்கண்ணீர் வடிப்போம்.

அதெல்லாம் வீண்...

நாட்டின் சிறந்த குடிமகன் என்றால், ஒரு குடிமகனுக்கான கடமைகள் என்னன்னு முதல்ல தெரிஞ்சுக்கனும் நாம.

அதுக்கப்புறம் நம்ம நாட்டின் கட்டமைப்பு எப்படிப் பட்டது?

இங்கிருக்கும் அரசியல் எப்படிப்பட்டது?

அரசியல்வாதிகள் எப்படிப் பட்டவர்கள்?

அவர்களுக்கு லகான் போடனும்னா அதுக்கு முதல்ல நமக்கு அவர்கள் செய்த குற்றங்களைப் பற்றிய, தவறுகளைப் பற்றிய விவரங்கள் தெரிஞ்சிருக்கனுமே அதுக்காகவாவது நாட்டு நடப்பை நாம் அறிந்திருக்கனும்.

இந்த விடியோல லோக்பால், லோக் ஆயுக்தா பற்றி கேள்வி கேட்டிருக்கோம். எத்தனை பேர் சரியான பதில் சொல்லி இருக்காங்கன்னு பாருங்க.

எத்தனை பேர் தவறான புரிதலோட இருக்காங்கன்னு பாருங்க.

நிச்சயம் இதுமாதிரியான விஷயங்களில் நம் மக்களுடைய புரிதல் எல்லையும், அறிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகரிக்கனும்.

இல்லைன்னா நம்மள நம்மளாலேயே காப்பாத்திக்க முடியாது.

கருத்தாக்கம்: கார்த்திகா வாசுதேவன்
ஒளிப்பதிவு: ராகேஷ்
ஒருங்கிணைப்பு: உமா ஷக்தி & திவ்யா தீனதயாளன்
படத்தொகுப்பு: சவுந்தர்யா முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com