ஜல் ஜீவன் திட்டத்துக்கு பட்ஜெட்டில் கடந்த ஆண்டைவிட 4.5% அதிக நிதி

இந்தியா அதன் மிகக் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனத்தின் கூட்டு நீர் மேலாண்மை அட்டவணை 2018- இன் படி, 21 இந்திய நகரங்கள் வரும் ஒரு சில ஆண்டுகளில் 'நீர
ஜல் ஜீவன் திட்டத்துக்கு பட்ஜெட்டில் கடந்த ஆண்டைவிட 4.5% அதிக நிதி
ஜல் ஜீவன் திட்டத்துக்கு பட்ஜெட்டில் கடந்த ஆண்டைவிட 4.5% அதிக நிதி

இந்தியா அதன் மிகக் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனத்தின் கூட்டு நீர் மேலாண்மை அட்டவணை 2018- இன் படி, 21 இந்திய நகரங்கள் வரும் ஒரு சில ஆண்டுகளில் 'நீரற்ற நாள்'-ஐ (டே ஜீரோ) எதிர்கொள்ளக்கூடும். 

நீரற்ற நாள் என்பது ஒரு இடத்திற்கு சொந்தமாக குடிநீர் இல்லாத நாளைக் குறிக்கிறது. பெங்களூரு, சென்னை, புது தில்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள் இதில் மிகவும் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
 
75 சதவீத இந்திய வீடுகளில் குடிநீர் இல்லை என்றும், சுமார் 84 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் வசதி இல்லை என்றும், மேலும் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படும் இடங்களில் நீர் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

தில்லி, மும்பை போன்ற நகரங்கள் ஒரு நாளைக்கு 150 லிட்டர், நிலையான நகராட்சி நீர் விதிமுறையை விட அதிகமாக பெறுகின்றன, மற்றவர்களுக்கு 40-50 லிட்டர் கிடைக்கிறது.
 
அனைத்து அடிப்படை சுகாதாரம் மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலக சுகாதார நிறுவனம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 25 லிட்டர் தண்ணீரை பரிந்துரைக்கிறது. உலக சுகாதாரத் துறை மதிப்பீடுகளின்படி, கூடுதலாகக் கிடைக்கக்கூடிய நீர், சுத்தம் செய்வது போன்ற குடிக்க முடியாத தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.


ஜல் ஜீவன் திட்டம் என்றால் என்ன?

ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசின் முன்முயற்சியான ஜல் ஜீவன் திட்டம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குழாய் நீர் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பாதி குடும்பங்களுக்கு குழாய் நீர் கிடைக்கவில்லை என்று கூறினார். ஜல் ஜீவன் திட்டத்துக்காக ரூ.3.50 லட்சம் கோடி ஒதுக்கியுள்ள அவர், வரும் ஆண்டுகளில் மத்திய மற்றும் மாநில அரசு இதை நோக்கி செயல்படும் என்றார்.

ஜல் ஜீவன் திட்டம், கிராமப்புற இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-க்குள் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பழுப்புநிற நீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி முறையில் நீரை பயன்படுத்துவது போன்றவற்றையும் இந்த திட்டம் செயல்படுத்தும்.

ஜல் ஜீவன் திட்டத்துக்கான 2021-22 ஆண்டின் நிதி

2021-22ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிட்டார். அதில் ஜல் ஜீவன் திட்டத்துக்காக 50,000 கோடியை ஒதுக்கியுள்ளார். இது கடந்த ஆண்டைவிட 4.5 சதவீதம் அதிகம். 2020-21 ஜல் ஜீவன் மிஷனுக்காக ஒதுக்கப்பட்டது 11,000 கோடி. இதன் முக்கிய நோக்கம் 2024-க்குள் இத்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீரை வழங்குவது மட்டுமே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com