கோவிஷீல்டா? கோவேக்ஸினா? - முடியாத சர்ச்சை

தடுப்பூசிகள் அனைத்தும் ஒரே தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டவை அல்ல. ஒரு உண்மையான நோய்க்காரண கிருமியை செயலற்று போகச் செய்து அதை நம் உள்ளே செலுத்துவதுதான் தடுப்பூசியின் அடிப்படை தாத்பரியம். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தடுப்பூசிகள் அனைத்தும் ஒரே தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டவை அல்ல. ஒரு உண்மையான நோய்க்காரண கிருமியை செயலற்று போகச் செய்து அதை நம் உள்ளே செலுத்துவதுதான் தடுப்பூசியின் அடிப்படை தாத்பரியம். 

சுமார் 120 வருடங்களாக இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது. இது மிகச்சிறப்பாக செயல்பட்டு பல நோய்களை காணாமலும் போகச் செய்திருக்கிறது. இதுவே 'செயலிழந்த-வைரஸ் தொழில்நுட்பம்' (Inactivated Virus Technology) என்பது. செயலிழந்த வைரஸை உடலினுள் செலுத்துவது. 

ஆனால், கரோனா தடுப்பூசி அனைத்தும் இந்த நெடுங்காலம் உபயோகப்படுத்தப்பட்ட செயலிழந்த வைரஸ் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை அல்ல. பல்வேறு புதிய தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் புதிய தொழில்நுட்பத்தில்தான் அதிக வகை கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

கோவேக்ஸின்(Covaxin), சிநோவாக் (Sinovac-Coronavac), சினோபார்ம்(Sinopharm), கோவிவாக்(Covivac) ஆகிய 4 தடுப்பூசிகள் மட்டுமே இந்த பாரம்பரிய தடுப்பூசி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. 

பைசர்(Pfizer), மாடர்னா(Moderna), கோவிஷீல்ட்(Covishield or AstraZeneca) உள்பட மீதி அனைத்துமே பல்வேறு புதிய தொழில்நுட்பம் உபயோகித்து தயாரிக்கப்பட்டது. 

இப்போது உலகம் முழுக்க 1,000 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதால் இப்போது எந்த தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்பதைக் காண்பிக்கும் தரவுகள் கிடைத்துள்ளன. 

இந்த தரவுகளை வைத்துப் பார்க்கும்போது வெகுகாலமாக உபயோகித்து வரும் 'செயலிழந்த-வைரஸ் தொழில்நுட்பம்'தான் சிறப்பாக செயல்பட்டு இருப்பது தெரிகிறது. மற்ற புதிய தொழில்நுட்ப தடுப்பூசிகள் பல இடங்களில் துரதிர்ஷ்டவசமாக தோற்று இருப்பதாகவே தோன்றுகிறது.

பிற தொழில்நுட்ப தடுப்பூசி ஐ.சி.யு. பிரிவுக்குச் செல்லும் வாய்ப்பை பாதியாகக் குறைத்து இருப்பது உண்மை என்றாலும், இந்த வகை தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடுகளில், தடுப்பூசிக்குப் பிறகு மொத்த தொற்றோ, மொத்தமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் எண்ணிக்கையோ மொத்த இறப்பு எண்ணிக்கையோ முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு முன் இருந்ததைவிட குறையவில்லை அல்லது அதிகரித்திருக்கிறது என்பதே வருத்தமான உண்மை. 

அதிகமாக புதிய தொழில்நுட்ப தடுப்பூசிகளை செலுத்தி கொண்ட நாடுகளும், அதிகமான தொற்று மற்றும் உயிரிழப்பை கொண்ட நாடுகளும் கிட்டத்தட்ட ஒன்றே என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

தடுப்பூசி செலுத்தாத நாடுகள் அல்லது பழைய தொழில்நுட்ப தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது மொத்த கரோனா தொற்று, மொத்த கரோனா இறப்பு, கரோனா அல்லாத மொத்த இறப்பு இவை அனைத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளன.

சிங்கப்பூர்

இதற்கு உதாரணம் சிங்கப்பூர். தடுப்பூசி செலுத்தும் முன்னர் அந்த நாட்டின் கரோனா தொற்று மற்றும் இறப்பு அளவு, தடுப்பூசி செலுத்திய பிறகு பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது. 

மே 2021 முதல் ஆகஸ்ட் 2021 வரை சுமார் 80% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்கிறார்கள். 2021 செப்டம்பர் மாதம் அங்கு மிக மோசமான கரோனா அலை வருகிறது. கரோனா துவங்கிய 2020 தொடக்கத்தில் இருந்து சுமார் 15 மாதம் எந்த தடுப்பூசியும் செலுத்தாமல் இருந்தபோது வராத அலை செப்டம்பர் மாதம் நிறைய உயிர்ப்பலி வாங்கியது. அவர்கள் பெரும்பாலும் செலுத்திக்கொண்டது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள். 

கியூபா

அடுத்த உதாரணம் கியூபா. 2021 ஜூன்-ஜூலை மாதத்தில் கியூபா தன் சொந்தத் தயாரிப்பு புரத அடிப்படையிலான புதிய தொழில்நுட்ப தடுப்பூசியை 40%-க்கும் அதிகமான மக்கள் போட்டுக்கொண்டிருக்கும்போது அலை துவங்குகிறது. அந்நாட்டில் அதுவரை இல்லாத கரோனா அலை. 2020 துவக்கத்தில் இருந்து சுமார் 18 மாதங்கள் மிக மிகக் குறைந்த கரோனா இறப்புடன் சமாளித்துவந்த கியூபா, புதிய தொழில்நுட்ப தடுப்பூசியை கணிசமான அளவு போட்டதும், பெருத்த அலையை வரவழைத்துக்கொண்டது.

அமெரிக்கா

உலக மொத்த கரோனா தொற்று, தடுப்பூசிக்கு முன் உலக ஜனத்தொகையில் சுமார் 1%தான். ஆனால் அமெரிக்கா உள்பட புதிய தொழில்நுட்ப தடுப்பூசி 70%-க்கு மேல் போட்டுக்கொண்ட நாடுகளில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், மக்கள் தொகையில் 20% பேருக்கு மேல். இறப்பும், மக்கள்தொகையில் 0.26% உள்ளது. இது உலக கரோனா இறப்பு 790 கோடி மக்களில் 56 லட்சம் (0.07%)விட 4 மடங்கு அதிகம். 

2020 டிசம்பர் 15 முதல் அமெரிக்காவில் மிக வேகமாக பைசர், மாடர்னா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டது. சுமார் 4 அல்லது 5 மாதங்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 70% மேற்பட்ட மக்கள்தொகைக்கு தடுப்பூசி செலுத்தி விட்டது. ஆனால், ஜுலையில் இருந்து இன்று வரை தினசரி இறப்பு குறையவே இல்லை. மாறாக, அதிகரித்த வண்ணமே இருக்கிறது. 

அமெரிக்காவில் தடுப்பூசிக்கு முன் சுமார் 3.5 லட்சம் இறப்புகளும் தடுப்பூசிக்குப் பின்னர் 5 லட்சம் கரோனா இறப்புகளும், இதுதவிர கரோனா அல்லாத அதிக இறப்பு 10.5 லட்சமாக குறிப்பிடப்படுகிறது. 

எந்த வருடமும் இல்லாத அளவு கரோனாவை தாண்டியே அமெரிக்காவில் 10.5 லட்சம் இறப்புகள் என்பது கவனிக்கப்பட வேண்டியது. இது தடுப்பூசி பக்க விளைவாக இருக்கலாம் அல்லது உறுதி செய்யப்படாத கரோனாவினால் இருக்கலாம்.  ஏனெனில், அமெரிக்காவின் தடுப்பூசி பக்க விளைவு இதுவரை இருந்த அனைத்து தடுப்பூசி பக்க விளைவையும் சேர்த்த மொத்தத்தையும் விட அதிகமாக கரோனா தடுப்பூசி பக்க விளைவாக அவர்கள் அதிகாரபூர்வ வலைத்தளத்திலும் மக்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்கள், தடுப்பூசி பக்க விளைவாக பதிந்தவை எல்லாம் தடுப்பூசியின் பக்க விளைவுகள் என்று கூறிவிட முடியாது என்றாலும் இந்த 10.5 லட்சம் இறப்புகள் குறித்து ஆராயப்பட வேண்டியது அவசியம். 

ரஷியா 

2021 ஜனவரி முதல் 2022 ஜனவரி வரை ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்கும் ரஷியா, பெரும்பாலான 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடித்திருந்தாலும் அங்கு இறப்பு பெரிய அளவில் குறையவில்லை. சாதாரணமாகவே ஒரு தொற்று அலை பெரிய உச்சிக்கு ஏறினால், தானே இறங்கும் தன்மை கொண்டது. அதுவே 6 மாதம் கழித்தே அங்கு நடக்கிறது. 

அலையே வராமல் பல்வேறு தடுப்பூசிகளை போட்டு கொள்ள ஆரம்பித்த பிறகு தொற்று வர துவங்கிய மற்றொரு நாடு வியட்நாம். 2021 ஜுன் - ஆகஸ்ட் காலத்தில் 4 வகை தடுப்பூசி செலுத்தி கொண்டது வியட்நாம். 65% மேல் அது புதிய தொழில்நுட்ப தடுப்பூசியை செலுத்திக்கொண்டது. 

இயற்கையாகவே நமக்கு நிகழும் உடல் உபாதைகள் மற்றும் மரணம், தடுப்பூசி செலுத்திய பிறகு நடக்கலாம். ஆகையால், அது தடுப்பூசி பக்க விளைவு என்று கூறிவிட முடியாது என்பது முற்றிலும் உண்மை. அதேநேரம், நாம் கவனிக்க வேண்டிய விஷயம், அது எல்லா தடுப்பூசிக்கும் பொருந்தும். மற்ற தடுப்பூசிக்குப் பின்னர் உடல் சீர்கேடு அடைந்ததாக கடந்த 30 வருடங்களில் வந்திருக்கும் பதிவுகளைவிட கரோனா தடுப்பூசிக்கு அதிகமாக உடல் சீர்கேடு வந்திருப்பதால் (சுமார் 29 லட்சம் பதிவுகள் உலகம் முழுக்க) இவை விரைவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். இதே சமயத்தில் சராசரி வருட இறப்பை தவிர ஒவ்வொரு பகுதியிலும் இருந்து வரும் அதிக இறப்பு (கரோனா தவிர) அவற்றையும் ஒவ்வொரு அரசும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் இதயத் திசுக்கள் மற்றும் இதயத்தைச் சுற்றியுள்ள திசுக்களை விரிவடையச் செய்யும் பிரச்னையை சிலருக்கு உருவாக்குவது உறுதியானதால், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இது பற்றி ஜுன் 2021 இல் கொடுத்த பத்திரிகை செய்தியின்படி,  இந்த தடுப்பூசி செலுத்திக்கொள்பவரிடம் இதைக் கூறி, அதன்பிறகு விருப்பம் இருந்தால் மட்டுமே தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் 'விகி ஆக்ஸஸ்'(vigiaccess) இணையப் பக்கத்தில், மிக அதிகமாக தடுப்பூசியின் பக்க விளைவுகள் இருப்பதாக மக்களால் பதிவு செய்யப்பட்டிருக்கும் அமெரிக்கா (37%) மற்றும் ஐரோப்பிய நாடுகள் (49%) கிட்டத்தட்ட முழுமையாக புதிய தொழில்நுட்ப தடுப்பூசியை மட்டுமே பயன்படுத்தியவர்கள் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

பாரம்பரிய தடுப்பூசி தொழில்நுட்பம் உபயோகித்து தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின், சிநோவாக் (கரோனாவேக்), சினோஃபார்ம், கோவிவாக், இவற்றை மட்டுமே பெரும்பாலும் செலுத்திய நாடுகள் சீனா, ஹாங்காங், உருகுவே, இந்தோனேசியா, மங்கோலியா, பஹரெய்ன், துபாய் (UAE), சிலி Chile, பிரேசில் ஆகியவை. இந்த நாடுகள் அனைத்திலும் தடுப்பூசிக்குப் பின்னர், பாதிப்பு பெரிய அளவில் குறைந்து இருக்கிறது. கரோனா இறப்பு வெகுவாக குறைந்து விட்டது. 

இந்தியா, ரஷியா மற்றும் சீனா இந்த 3 நாடுகள் மட்டுமே பழைய தொழில்நுட்ப தடுப்பூசிகளை தயாரித்து இருக்கின்றன. மற்ற நாடுகள் புதிய தொழில்நுட்ப தடுப்பூசிகள் மட்டுமே தயாரித்ததாலும் அவற்றை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் 90% உலக தடுப்பூசி சந்தையைப் பிடித்துவிட்டன. இன்று 1000 கோடியில் சுமார் 870 கோடி டோஸ்கள் புதிய தொழில்நுட்ப மேற்கத்திய தயாரிப்புகளே.

ஆப்பிரிக்கா

ஆச்சரியம் என்னவென்றால், இந்த 2 வகை தடுப்பூசிகளையுமே செலுத்தாத ஆப்பிரிக்கா மிகக்குறைந்த உயிரிழப்புகளுடன் இரண்டு கரோனா ஆண்டுகளைக் கடந்து விட்டது. 

உலகின் இறப்பு, கரோனா தொற்று விகிதங்களைப் பார்க்கையில், தடுப்பூசி மிகக் குறைந்த அளவில் (9.5%) செலுத்தி உள்ள ஆப்பிரிக்காவின் தொற்று மற்றும் இறப்பு சதவிகிதம் பிற நாடுகளைவிட பல மடங்கு குறைவாக (ஐந்தில் ஒரு மடங்கு) உள்ளது. ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் கரோனா பரிசோதனை சரியாக இருக்காது என்பதால், பிற வருடங்களை விட நடந்த அதிக இறப்பை வைத்து கணக்கிட்டு பார்க்கிறோம். அவர்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளைவிட மிக குறைவாக சதவிகிதம் கரோனா பலி கொடுத்திருப்பது தெரிய வருகிறது. அதாவது 121 கோடி மக்கள் தொகைக்கு சுமார் 7 லட்சம் அதிக இறப்புக்கள் (கரோனா இறப்புடன் சேர்த்து). இது வெறும் 0.05% தான். புதிய தடுப்பூசி 25% மேல் செலுத்திய நாடுகளுடன் ஒப்பிட்டால் ஐந்தில் ஒரு பங்கு கூட இல்லை. 

ஆப்பிரிக்காவிலும் தென்னாப்பிரிக்கா, டுனிசியா எகிப்து போன்ற 25% மேல் புதிய வகை தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆப்பிரிக்க நாடுகள்தான் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளை விட அதிக இறப்பை சந்தித்து இருக்கிறது. ஆனால் 65% தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் ஆப்பிரிக்காவின் மொராக்கோ தேசம் பாதிப்பு குறைவாக தப்பித்ததற்கு காரணம் அது பழைய தொழில்நுட்ப தடுப்பூசியைப் பயன்படுத்தியது. 

60%-க்கும் மேல் பாரம்பரிய தொழில்நுட்ப தடுப்பூசியான சினோவேக் தடுப்பூசியை உபயோகித்து பஹ்ரெய்ன் கிட்டத்தட்ட நோய் பரவலைத் தடுத்து நிறுத்தியுள்ளதைக் காண முடிகிறது.

அதுபோல இந்தோனேசிய மக்களும் சினோவேக்கை அதன் பலன் தெரிந்து காத்திருந்து போட்டுக்கொள்வதற்கு காரணம்  இந்தோனேசியாவின் கரோனா இறப்பு குறைந்ததற்கு அந்த தடுப்பூசியே காரணம். 

ஐக்கிய அரபு அமீரகம் பெருமளவில் சினோஃபார்ம் என்ற பழைய தொழில்நுட்ப தடுப்பூசியை உபயோகித்து தன் ஒரு கோடி மக்கள்தொகையின் மொத்த கரோனா இறப்பை சுமார் 2,200 ஆக தடுத்து காத்துக்கொண்டது. 

எனவே, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நாடுகள், பழைய தொழில்நுட்ப தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடுகள் தப்பித்தன. புதிய தொழில்நுட்ப தடுப்பூசிகளைப் பயன்படுத்திய சுமார் 67% உலக மக்கள் அடுத்தடுத்த அலைகளில் இன்னும் சிக்கித் தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான கோடிகளை புதிய தொழில்நுட்ப தடுப்பூசியில் கொட்டியும் இன்னும் தொற்றோ இறப்போ மருத்துவமனை நிரம்புதலோ லாக்டவுனோ எல்லாமே கிட்டத்தட்ட தடுப்பூசிக்கு முந்தைய நிலையிலேயே இருப்பதை பார்க்க முடிகிறது. 

இந்தியாவில் பாரம்பரிய தடுப்பூசி தொழில்நுட்பம் உபயோகித்து நாமே கோவேக்ஸின் தயாரித்திருந்தாலும் சுமார் 15% பேர் மட்டுமே அதை செலுத்திக்கொண்டு உள்ளோம். மீதி 85% புதிய தொழில்நுட்பம் அந்நிய நாட்டு ஒப்பந்தத்துடன் தயாரித்ததுதான் (கோவிஷீல்ட், ஸ்புட்னிக் போன்றவை) .

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் 15%க்கு மேல் நமது தயாரிப்பான கோவேக்ஸினை உபயோகிக்கவே இல்லை என்பதே வருத்தமான விஷயம். கோவேக்சின் மட்டுமே எந்த நாட்டிலும் பெரும்பான்மையாக உபயோகிக்காததால் நம்மால் அதன் செயல்திறனை கண்டறிய முடியாவிட்டாலும், அது சினோவேக் சினோஃபார்ம் போன்ற 120 வருடம் பலன் தந்த பாரம்பரிய தொழில்நுட்ப தடுப்பூசி என்பதால் நல்ல பலன் எதிர்பார்க்கலாம்.

இனியாவது நம்முடைய 100% சொந்தத் தயாரிப்பான பாராம்பரிய தடுப்பூசி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அரசு, அனைத்து தரவுகளையும் சரியாக ஆராய்ந்து, எந்த தடுப்பூசி சிறந்தது என்று பார்த்து நமது சொந்த நாட்டுத் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அவப்பெயர் வாங்கிய அஸ்ட்ராஜெனகா, இங்கே 'கோவிஷீல்ட்' என்ற பெயரில் உபயோகப்படுத்தடுகிறது. இதை நிறுத்தி கோவேக்ஸினின் உபயோகத்தை அதிகரிக்க வேண்டும். மேலும், தடுப்பூசி வேண்டாம் என்று தவிர்ப்பவர்களை கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது.

[கட்டுரையாளர் - சமூக ஆர்வலர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com