இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியை பிரதமர் நரேந்திர மோடியின் தொடக்க கால மற்றும் தற்போதைய சுதந்திர உரைகளின் ஒப்பீடு மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
தொடக்க காலங்களில், பிரதமரின் உரைகள் பெரும்பாலும் இப்போது சாதாரணமாகக் கருதப்படக் கூடிய கழிப்பறைகள், மின்சாரம், வறுமை, சாலைகள், வங்கிக் கணக்குகள், உரத் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் குறித்தே அமைந்திருந்தன. காலப்போக்கில், அடிப்படை வசதிகளைப் பெறுதல் என்பதிலிருந்து உயர்ந்த லட்சியங்களை நோக்கி நகர்தல், குறைகளை நிவர்த்தி செய்வதிலிருந்து திறன்களை வளர்த்தல், உடனடிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலிருந்து அத்தகைய பிரச்னைகள் மீண்டும் இந்தியாவில் ஏற்படுவதைத் தடுத்தல் என அந்தப் பயணம் விரிவடைந்தது.
1.கழிப்பறைகள் முதல் செமிகண்டக்டர் வரை
2014 - நமது தாய்மார்கள், சகோதரிகளின் கண்ணியத்தைக் காக்க நம்மால் கழிப்பறை வசதிகளைச் செய்துதர முடியாதா?
2026 - இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த உலகில், "சிப்' எனப்படும் செமிகண்டக்டர்களின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். இதில் தன்னிறைவு பெறும் நோக்கில் இந்தியா தனது சொந்த செமிகண்டக்டர் உற்பத்தித் திறனை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

-
2. கிராமப்புற சாலைகள் முதல் செயற்கைக்கோள்கள், ஏ.ஐ. வரை
2016 - கிராமப்புறச் சாலைகள் நம் நாட்டில் ஒரு தொடர் பிரச்னையாக உள்ளன. ஒவ்வொரு கிராமப்புறக் குடிமகனும் தரமான சாலை வசதியை விரும்புகிறார்.
2018 - நமது விஞ்ஞானிகள் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏவி உலகையே வியப்பில் ஆழ்த்தினர்.
2025 - விண்வெளித் துறையில் தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் 'ககன்யான்' பயணத்துக்கு தயாராகி வருகிறோம்.
2026 - இது, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், விண்வெளி, ரோபோட்டிக்ஸ், தரவு மையங்கள் ஆகியவற்றின் காலம். நாம் புதுமையின் மையமாகவும் திகழ வேண்டும்.
3. வறுமைக்கு எதிரான போராட்டம்
2014 - வறுமையை ஒழிப்பது காலத்தின் கட்டாயமாகும்.
2026 - 2014-க்கு முன் 25 கோடி மக்களுக்கு மட்டுமே சமூகப் பாதுகாப்புத் திட்டம் இருந்தது. பத்து ஆண்டுகளுக்குள் 100 கோடி மக்களுக்கு நாங்கள் சமூகப் பாதுகாப்பு வசதியை வழங்கப்பட்டுள்ளது.

4. பெண்களின் கண்ணியம் முதல் பெண்கள் தலைமை வரை
2014 - நம் தாய்மார்கள், சகோதரிகளின் கண்ணியத்தைக் காக்க நம்மால் கழிப்பறை வசதிகளைச் செய்து தர முடியாதா?
2026 - பெண்களின் கண்ணியத்தைக் காக்கவும், இந்தியாவின் கொள்கை உருவாக்கத்தில் அவர்கள் பங்களிக்கும் வகையிலும் பேரவைகள், மக்களவையில் அவர்களுக்கு 33% பிரதிநிதித்துவம் கிடைப்பதை விரைவில் உறுதி செய்ய முன்வருவோம்.
5. விவசாயிகளுக்கு முன்னுரிமை
2014 - வட்டிக்கு கடன் கொடுப்பவரிடம் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல், நம் விவசாயிகள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
2025 - கடந்த ஆண்டில் நமது விவசாயிகள் தானிய உற்பத்தியில் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்தனர். ரூ.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
2026 - தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் இப்போது நம் விவசாயிகளுக்கு உலகளாவிய சந்தைகளுக்கான அணுகல் கிடைத்துள்ளது.
6. ஸ்டார்ட்-அப் இந்தியா
2015 - புத்தாக்க நிறுவனங்களுக்கு வலுசேர்க்க "ஸ்டார்ட்-அப் இந்தியா", "ஸ்டாண்ட்-அப் இந்தியா' ஆகிய முன்முயற்சிகள் அமலுக்கு வரும்.
2026 - சராசரி வயது 28-ஆக கொண்ட இளைஞர்களின் தலைமையிலான இந்திய தனியார் புத்தாக்க நிறுவனங்கள், தங்கள் செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகளையு செலுத்தி, முதல் முயற்சியிலேயே சாதித்துள்ளனர்.
7. உற்பத்தி / தொழில்நுட்பத் துறையில் தற்சார்பு
2014 -மின்சாரம் முதல் மின்னணுவியல் வரை இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள். வாகனங்கள் முதல் செயற்கைக்கோள்கள், நீர்மூழ்கிக் கப்பல் வரை உள்நாட்டில் உற்பத்தி செய்யுங்கள்.
2025 -இந்த ஆண்டின் இறுதிக்குள், இந்திய மக்களால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட "சிப்' சந்தையில் கிடைக்கும்.
2026 - சிறிய உதிரிபாகங்கள் முதல் அதிநவீன தயாரிப்புகள் வரை அனைத்தையும் உற்பத்தி செய்ய வேண்டும். முழு மதிப்புச் சங்கிலியும் நம்முடையதாக இருக்க வேண்டும்.
8. கிராமப்புற மின்மயமாக்கல் முதல் அணுசக்தி விரிவாக்கம் வரை
2015 - 18,500 கிராமங்களுக்கு மின் விநியோகம் வழங்கும் இலக்கு அடுத்த 1,000 நாள்களுக்குள் எட்டப்படும்.
2026 - 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தியை எட்டுவதே இலக்கு.
9. இணைய இணைப்பு
2015 - இந்தியாவின் அனைத்து கிராமங்களும் அகண்ட அலைவரிசை (பிராட் பேண்ட்) இணைப்பு வழங்கப்படும்.
2026 - இணையப் பயனர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 100 மடங்கும் அதிகரித்துள்ளன.
10. நக்ஸல் / இடதுசாரி தீவிரவாதம்
2017 - இடதுசாரி தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படைகளின் முயற்சிகள், தீவிரவாதிகளை சரணடைய செய்து, நாட்டின் பிரதான நீரோட்டத்தில் இணைக்க உதவுகின்றன.
2025 - நகஸல் பாதிப்பு மாவட்டங்களின் எண்ணிக்கை 125-இல் இருந்து வெறும் 20-ஆக குறைத்துள்ளோம்.
2026 - முன்பு நக்ஸல் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் இப்போது வளர்ச்சி, நம்பிக்கை, விடாமுயற்சியின் அடையாளமான மூவண்ணக் கொடி பறக்கிறது.
11. வங்கிக் கணக்குகள், யுபிஐ மற்றும் உலகளாவிய நிதிசார் தொழில்நுட்பம்
2015 - சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கடந்த பிறகும் நாட்டின் 40% மக்களிடம் வங்கிக் கணக்கு இல்லை.
2026 - யுபிஐ, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் நமது திறனை நிரூபித்துவிட்டோம். இனி, இந்தியா தனது டிஜிட்டல் பொதுத் தொழில்நுட்பங்களை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய கொடி ஏற்றச் செல்வதற்கு முன்பு 'நண்பர்களை' சந்தித்த பிரதமர் மோடி!

சுதந்திர நாள்: மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இன்று சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுகிறாா் பிரதமா் மோடி - நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு





