பட்டுக்கோட்டை பெண்கள் பள்ளியில் 100 சதம் தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வு எழுதிய பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 391 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


பிளஸ் 2 தேர்வு எழுதிய பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 391 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவி டி. சுவாதி 1180 மதிப்பெண்கள் பெற்று தஞ்சை மாவட்ட அளவில் 3-ம் இடத்தையும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் 2-ம் இடத்தையும் பெற்றார்.
இவரது மதிப்பெண்கள்: தமிழ்-195, ஆங்கிலம்-194, கணிதம்-200, இயற்பியல்-195, வேதியியல்- 198, உயிரியல்-198.
1172 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ம் இடம் வந்துள்ள மாணவி பி. சூரியா பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-195, ஆங்கிலம்-197, கணிதம்-200, இயற்பியல்-195, வேதியியல்-199, உயிரியல்-186.
1167 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பெற்ற மாணவி ஆர். கிருஷ்ணவேணி பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-197, ஆங்கிலம்-190, கணிதம்-200, இயற்பியல்-193, வேதியியல்-198, உயிரியல்-189.
இத்தேர்வில் 4 பேர் 1150-க்கு கூடுதலாகவும், 29 பேர் 1100-க்கு கூடுதலாகவும், 110 பேர் 1000-க்கு கூடுதலாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் 6 பேர், தாவரவியல், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களில் தலா ஒருவர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் செபஸ்தியம்மாள், தலைமை ஆசிரியை ஜெபமாலை, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஜி. இமானுவேல்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...