வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 10

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 10

முந்தைய ஆண்டு வினாக்கள் வினா - விடை வங்கி...
Published on
Q

1. வறுமை ஒழிப்பு திட்டங்களை கால வரிசைப்படுத்தி எழுதுக.

1. தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்

2. ராஜீவ் ஆவாஸ் யோஜனா

3. பாரத் நிர்மான் யோஜனா

4. தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம்

(A) 1 2 4 3

(B) 3 1 4 2

(C) 3 2 1 4

(D) 2 3 4 1

Q

2. சரியான இணையைத் தேர்ந்தெடு:

1. பாம்பே திட்டம் - 1940

2. காந்தியத் திட்டம் - 1945

3. மக்கள் திட்டம் - 1944

4. சர்வோதயத் திட்டம் - 1950

(A) 2 மற்றும் 3 சரி

(B) 1 மற்றும் 2 சரி

(C) 1 மற்றும் 4 சரி

(D) 2 மற்றும் 4 சரி

Q

3. "மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை".

கூற்று 1: வாய்மை பேசுபவர்கள் தானம், தவம் செய்பவர்களை விட சிறந்தவர்கள்.

கூற்று 2 : வாய்மையே பேசினாலும் தானம், தவம் செய்பவரே சிறந்தவர்.

(A) கூற்று 1 - சரி

(B) கூற்று 2-சரி

(C) கூற்று 1, 2- சரி

(D) கூற்று 1, 2-தவறு

Q

4. பொருத்துக.

(a) அயோத்திதாசப் பண்டிதர் 1. தத்கிப்-ஒல்-அக்லுக்

(b) இராமலிங்க அடிகள் 2. குலாம்கிரி

(c) ஜோதிபா பூலே 3.திருவருட்பா

(d) சையது அகமது கான் 4.ஒரு பைசாத் தமிழன்

(a) (b) (c) (d)

(A) 1 2 3 4

(B) 4 3 2 1

(C) 4 3 1 2

(D) 1 2 4 3

Q

5. கூற்று [A] :

(South Indian Celebrities) என்ற நூலின் ஆசிரியர் K.M. பாலசுப்பிரமணியன், டாக்டர். சி. நடேச முதலியாரை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டு எழுதினார்.

காரணம் [R]:

நீதிக்கட்சியின் இதயமாகத் திகழ்ந்த நடேச முதலியார் அன்புக்கும், பண்புக்கும், பொறையுடைமைக்கும், சமரச மனப்பான்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்.

(A) கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு

(B) கூற்று [A], காரணம் [R] இரண்டும் சரி மேலும் காரணம் [R] கூற்று [A] ன் சரியான விளக்கம் ஆகும்.

(C) கூற்று [A] தவறு காரணம் [R] சரி

(D) கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் காரணம் [R] கூற்று [A] வை விளக்கவில்லை என்பது சரி

Q

6. இராமலிங்க அடிகளாரைப் பற்றிய எந்தக் கருத்து சரியானது?

(i) இசைக் கருவிகள் தவிர்த்து மனம் ஒன்றிடல் வேண்டும் என்றார்.

(ii) விவசாயிகளுக்காக இரவு நேரப் பள்ளியைத் தொடங்கினார்.

(iii) மனிதத் தொண்டாற்றல் மூலம் வாழ்வில் முழுப் பயனைப் பெற்று இறையோடு ஒன்ற வேண்டும் என்றார்.

(A) (i) மட்டும்

(B) (i) மற்றும் (iii) மட்டும்

(C) (i) மற்றும் (ii) மட்டும்

(D) (ii) மற்றும் (iii) மட்டும்

Q

7. கூற்று [A] : 1930-ல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் "அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பது" எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

காரணம் [R] : பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம்மசோதா "பொட்டுக் கட்டும் சடங்கு' நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என அறிவித்தது.

(A) [A] சரி ஆனால் [R] தவறு

(B) [A] தவறு ஆனால் [R] சரி

(C) [A] மற்றும் [R] சரி மேலும் [R], [A] யின் சரியான விளக்கம்

(D) [A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A] யின் சரியான விளக்கமல்ல

Q

8. கூற்று [A] : சென்னையில் இராஜாஜி தலைமையில் சைமன் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

காரணம் [R] : சைமன் குழுவில் உறுப்பினர் அனைவரும் வெள்ளையரே, அதாவது குழுவில் இந்தியரே இல்லை

(A) [A] சரி, [R] தவறு

(B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R], [A] ன் சரியான விளக்கம் ஆகும்

(C) [A] தவறு, [R] சரி

(D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R], [A] - சரியான விளக்கமல்ல

Q

9. கீழ்கண்ட நூல்களை ஆசிரியர்களோடு பொருத்தவும்.

(a) வெற்றிவேற்கை 1. ஒளவையார்

(b) நன்னெறி 2. குமரகுருபரர்

(c) நீதிநெறி விளக்கம் 3. அதிவீரராம பாண்டியர்

(d) நல்வழி 4. துறைமங்கலம் சிவப்பிரகாசர்

(a) (b) (c) (d)

(A) 1 3 4 2

(B) 1 4 2 3

(C) 3 4 2 1

(D) 3 4 1 2

Q

10. பின்வருவனவற்றுள் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஊர்களை அவ்வூர் அமைந்துள்ள மாவட்டத்துடன் பொருத்திக் காட்டுக.

(a) அழகன்குளம் 1.சிவகங்கை

(b) வசவசமுத்திரம் 2.ஈரோடு

(c) கொடுமணல் 3.காஞ்சிபுரம்

(d) கீழடி 4.இராமநாதபுரம்

(a) (b) (c) (d)

(A) 1 4 3 2

(B) 4 2 3 1

(C) 3 1 2 4

(D) 4 3 2 1

Q

11. கீழ்க்காணும் நோய்களும் (Column I) அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் (Column II) பொருத்துக:

Column I Column II

(a) டெங்கு 1. குடல், மூளை

(b) இளம்பிள்ளை வாதம் 2.தோல், இரத்தம்

(c) தட்டம்மை 3.சுவாசப்பாதை, நரம்பு மண்டலம்

(d) சின்னம்மை 4. தோல், சுவாசப்பாதை

(a) (b) (c) (d)

(A) 2 1 4 3

(B) 2 1 3 4

(C) 2 4 3 1

(D) 1 3 2 4

Q

12. கூற்று [A] : கோபால்ட்-60 புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுகிறது.

காரணம் [R] : கோபால்ட்-60 காமா-கதிர்களின் மூலமாக செயல்பட்டு புற்றுநோய் செல்களை அழிக்க வல்லது.

(A) [A] மற்றும் [R] சரி மேலும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்

(B) [A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம் இல்லை

(C) [A] சரி ஆனால் [R] தவறு

(D) [A] மற்றும் [R] இரண்டும் தவறு

Q

13. தமிழ்நாட்டில், விடியல் பயணம் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

(A) மே, 2021

(B) டிசம்பர், 2021

(C) மார்ச், 2022

(D) அக்டோபர், 2021

Q

14. கூற்று [A] : காலநிலை, நிலத்தோற்றம், மண் மற்றும் இயற்கை வளங்கள் போன்றவை மக்கள் தொகைப் பரவலைக் கட்டுப்படுத்துகின்றன.

காரணம் [R] : பிறப்பு, இறப்பு விகிதங்கள் மக்கள் தொகைப் பரவலை பாதிக்கவில்லை.

(A) [A] சரி, ஆனால் [R] தவறு

(B) [A] தவறு, ஆனால் [R] சரி

(C) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்

(D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை

Q

15. கீழ்கண்டவற்றை பொருத்துக:

இடப்பெயர்வு வேளாண்மை பகுதி

(a) லடாங் 1. மலேசியா

(b) மில்பா 2. வியட்நாம்

(c) ரோக்கா 3. பிரேசில்

(d) ரே 4. மெக்ஸிகோ

(a) (b) (c) (d)

(A) 1 4 3 2

(B) 3 4 1 2

(C) 4 2 3 1

(D) 2 3 4 1

Q

16. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.

ஆசிரியர் நூல்

(a) அமோகவர்ஷர் 1. மகாபுராணம்

(b) ஜீனசேனர் 2. கவிராஜமார்க்கம்

(c) குணபத்ரர் 3. காதம்பரி

(d) பாணர் 4. ஆதிபுராணம்

(a) (b) (c) (d)

(A) 2 4 3 1

(B) 2 4 1 3

(C) 2 3 4 1

(D) 2 3 1 4

Q

17. கீழ்க்கண்ட கூற்றுகளில் வேலுநாச்சியார் பற்றி எது/எவை சரியானவை?

(i) வேலுநாச்சியார் சிவகங்கை அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார்.

(ii) வேலுநாச்சியாரின் கணவர் நவாபின் படைகளால் கொல்லப்பட்டதால் ஆங்கிலேயரைத் தாக்கும் நோக்கத்துடன் கோபால் நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார்.

(iii) வேலுநாச்சியார் நோயுற்று 1790 -இல் இறந்தார்.

(A) (ii) மட்டும்

(B) (i) மற்றும் (iii)

(C) (i) மற்றும் (ii)

(D) (ii) மற்றும் (iii)

Q

18. கீழ்கண்டவற்றில் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சங்கள் எவை?

(i) உப்பை சுய பயன்பாட்டுக்கு உற்பத்தி செய்ய அனுமதிப்பது.

(ii) வன்முறையில் ஈடுபடாத அரசியல் கைதிகளை தொடர்ந்து சிறையில் வைப்பது.

(iii) அந்நியத் துணிகளை விற்கும் கடைகளின் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதிப்பது.

(iv) பகத்சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைப்பது.

(A) (i) மற்றும் (ii) மட்டும்

(B) (i) மற்றும் (iii) மட்டும்

(C) (ii) மற்றும் (iii) மட்டும்

(D) (ii) மற்றும் (iv) மட்டும்

Q

19. பின்வருவனவற்றுள் எவை சரியானவை?

(1) மதுரையில் ஹார்வி மில் தொழிலாளர்கள் 1918-இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

(2) மதுரை ஹார்வி மில் தொழிற்சங்கத் தலைவராக பி.பி. வாடியா இருந்தார்.

(3) டாக்டர். பி. வரதராசுலு அவர்களின் தொழிலாளர் ஆதரவு பேச்சு அரசாங்கத்தின் கண்களைத் திறக்கக் காரணமாயிற்று.

(4) டாக்டர். பி. வரதராசுலு "பிரபஞ்ச மித்திரன்” என்ற பத்திரிக்கையை நடத்தினார்.

(A) (1) மட்டும்

(B) (2) மட்டும்

(C) (1), (3) மற்றும் (4) மட்டும்

(D) (1), (2) மற்றும் (3) மட்டும்

Q

20. சுபாஷ் சந்திர போஸைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் தவறானது :

(1) சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23, 1897 அன்று மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவில் பிறந்தார்.

(ii) இந்திய அரசு அவரது பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதியை "தைரிய நாள்" என்று அறிவித்துள்ளது.

(iii) சுபாஷ் சந்திர போஸின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் ஜனவரி 23 ஆம் தேதி தேசிய விடுமுறை நாளாகும்.

(A) (iii) மட்டும்

(B) (i) மற்றும் (ii) மட்டும்

(C) (ii) மற்றும் (iii) மட்டும்

(D) (i) மற்றும் (iii) மட்டும்

Q

21. குடியரசு தின விழாவிற்கு தலைமை வகித்தக் குடியரசுத் தலைவரையும் அவருடன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விருந்தினரையும் பொருத்திக் காட்டுக.

குடியரசுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்கள்

(a) திரௌபதி முர்மு 1. சிரில் ராமபோசா

(b) ஏ.பி.ஜே. அப்துல்கலாம் 2.பிரபோவா சுபியாண்டோ

(c) பிரணாப் முகர்ஜி 3.விளாடிமிர் புடின்

(d) ராம் நாத் கோவிந்த் 4.பராக் ஒபாமா

(a) (b) (c) (d)

(A) 1 4 3 2

(B) 2 3 4 1

(C) 3 4 1 2

(D) 4 2 3 1

Q

22. தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனரகத்தின் இலவச அழைப்பு எண்

(1) 1062 மற்றும் 1963

(2) 1064 மற்றும் 1965

(3) 1066 மற்றும் 1967

(4) 1068 மற்றும் 1969

(A) (4)

(B) (2)

(C) (1)

(D) (3)

Q

23. தேர்தல் பற்றிய சரியான கூற்றுகளைக் கண்டறிக.

(i) 2003 எல்லா மாநில தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

(ii) மக்களவைத் தேர்தல் 2004ல் வாக்குப் பதிவு இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் வரலாற்று முடிவை எடுத்துள்ளது ஆணையம்,

(iii) இரண்டு மில்லியன் வாக்குப் பதிவு இயந்திரம் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.

(A) (i) மட்டும்

(B) (i) மற்றும் (iii) மட்டும்

(C) (i) மற்றும் (ii) மட்டும்

(D) (ii) மற்றும் (iii) மட்டும்

Q

24. சரியானவற்றோடு பொருத்துக:

குழுக்கள் தலைவர்

(1) பஞ்சாயத்து ராஜ் தேர்தல் குழு K. சந்தானம்

(2) பஞ்சாயத்து ராஜ் பகுப்பாய்வு

மற்றும் புள்ளியல் குழு G. ராமச்சந்திரன்

(3) பஞ்சாயத்து ராஜ் பயிற்சி குழு V.K. ராவ்

(4) பஞ்சாயத்து ராஜ் நிர்வாகக் குழு V. ஈஸ்வரன்

(A) (1) மற்றும் (3) மட்டும் சரி

(B) (1) மற்றும் (4) மட்டும் சரி

(C) (2) மற்றும் (3) மட்டும் சரி

(D) (3) மற்றும் (4) மட்டும் சரி

Q

25. அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் மீதான சரியான கூற்றானது.

(i) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் உறுப்பு 36 முதல் 51 வரை அரசமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

(ii) அரசமைப்பை உருவாக்கியவர்கள் இந்த சிந்தனையை ஸ்பானிஷ் அரசமைப்பிடம் பெற்றனர்.

(iii) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் என்பது அரசமைப்பின் ஆன்மாவாகும்.

(A) (i) மட்டும்

(B) (i) மற்றும் (iii) மட்டும்

(C) (i) மற்றும் (ii) மட்டும்

(D) (ii) மற்றும் (iii) மட்டும்

விடைகள்

1. (C) 3 2 1 4

2. (C) 1 மற்றும் 4 சரி

3. (A) கூற்று 1 - சரி

4. (B) 4 3 2 1

5. (B) கூற்று [A], காரணம் [R] இரண்டும் சரி மேலும் காரணம் [R] கூற்று [A] ன் சரியான விளக்கம் ஆகும்.

6. (B) (i) மற்றும் (iii) மட்டும்

7. (C) [A] மற்றும் [R] சரி மேலும் [R], [A] யின் சரியான விளக்கம்

8. (C) [A] தவறு, [R] சரி

9. (C) 3 4 2 1

10. (D) 4 3 2 1

11. (A) 2 1 4 3

12. (A) [A] மற்றும் [R] சரி மேலும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்

13. (A) மே, 2021

14. (A) [A] சரி, ஆனால் [R] தவறு

15. (A) 1 4 3 2

16. (B) 2 4 1 3

17. (A) (ii) மட்டும்

18. (B) (i) மற்றும் (iii) மட்டும்

19. (C) (1), (3) மற்றும் (4) மட்டும்

20. (D) (i) மற்றும் (iii) மட்டும்

21. (B) 2 3 4 1

22. (B) (2)

23. (C) (i) மற்றும் (ii) மட்டும்

24. (B) (1) மற்றும் (4) மட்டும் சரி

25. (B) (i) மற்றும் (iii) மட்டும்

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 10
வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com