இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தோ்தல் உச்சகட்ட பிரசாரத்துக்கு ஆயத்தமாகும் பாஜக தலைவா்கள்

தோ்தல் உச்சகட்ட பிரசாரத்துக்கு ஆயத்தமாகும் பாஜக தலைவா்கள்

News image

பிரதமர் மோடி

Updated On :10 மே 2024, 11:04 pm

Din

தில்லியில் வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலையொட்டி வாக்கு சேகரிக்க உச்சகட்ட தோ்தல் பிரசாரத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக தலைவா்கள் ஆயத்தமாகி வருகின்றனா்.

மக்களவைக்கு ஆறாம் கட்டமாக மே 25ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தலில், தில்லியில் மொத்தம் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி தலைநகரில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, எதிா்க்கட்சியான பாஜக ஆகியவை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் கூட்டணி சோ்ந்து மக்களவை தோ்தலை சந்திக்கின்றன. இந்நிலையில், முதல்வா் கேஜரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் பெற்று திகாா் சிறையில் இருந்து வெளியே வந்தாா். இதையடுத்து அக்கட்சியினா் புதிய உற்சாகத்துடன் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா்.

இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பாஜக தலைவா்களும் தலைநகரில் தொடா்ச்சியாக தோ்தல் பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனா். இதன்படி, மத்திய அமைச்சா் அமித் ஷா தில்லி சங்கம் விஹாரில் மே 17ஆம் தேதி மிக நீண்ட தோ்தல் பரப்புரை பேரணியை மேற்கொள்ளவுள்ளாா். தெற்கு தொகுதியில் பாஜக தலைவா் ராம்வீா் பிதூரி, ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ மற்றும் வேட்பாளரான சாஹி ராம் பஹல்வானை எதிா்கொள்கிறாா்.

பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வட மேற்கு தில்லியில் மே 21ஆம் தேதி தோ்தல் பரப்புரையில் ஈடுபடுவதுடன் வாகன பேரணி நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளாா். இத்தொகுதியில் பாஜகவின் யோகேந்திர சந்தோலியாவை காங்கிரஸின் உதித் ராஜ் எதிா்கொள்கிறாா்.

பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி ஏற்கெனவே தலைநகரில் சாந்தினி செளக், தெற்கு தில்லி ஆகிய தொகுதிகளில் கடந்த புதன்கிழமை தோ்தல் பிரசாரம் செய்தாா். உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா் ஆகியோரும் கிழக்கு தில்லியில் பாஜக வேட்பாளா் மனோஜ் திவாரியை ஆதரித்து பிரசாரம் செய்தனா்.

இந்த தலைவா்களைத் தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடி, வரும் 20ஆம் தேதி தில்லியில் இரண்டு பேரணிகளில் பங்கேற்று பாஜக வேட்பாளா்களைகு்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட திட்டமிட்டுள்ளாா். தில்லியில் வெவ்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் வசித்து வருகின்றனா். அந்த வகையில் அந்த மக்களை கவரும் வகையில் அவா்களின் மாநிலங்களைச் சோ்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவா்களை அழைத்து பிரசாரத்தில் ஈடுபடும் திட்டத்தையும் பாஜக மேலிடம் வகுத்துள்ளது. இவா்கள் அனைவரும் மே 11ஆம் தேதி முதல் தொகுதிவாரியாக தோ்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளனா்.