உடுமலை அரசு மருத்துவமனையை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியது, உடுமலை நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வசதி கொண்டு வந்தது, ரூ.265 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது, நூறாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி உடுமலை நகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.50 கோடி பெற்றுத் தந்தது, பிஏபி திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் காண்டூர் கால்வாய் சீரமைப்புக்காக ரூ.72 கோடியை பெற்றுக் கொடுத்தது, உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் சுமார் ரூ.300 கோடி மதிப்பில் சாலை வசதிகளை மேம்படுத்தியது, ரூ.56 கோடி மதிப்பீட்டில் திருமூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தியது போன்றவற்றை கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட முக்கிய பணிகள் எனலாம்.