டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

வெளிநாட்டுத் தலைவர்களைக் கட்டிப்பிடிப்பது மட்டுமே பிரதமரின் வெளியுறவுக் கொள்கையா? ராகுல் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு

வெளிநாட்டுத் தலைவர்களை பிரதமர் மோடி கட்டிப்பிடிப்பதாக விமர்சித்துப் பேசிய ராகுல் காந்திக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து...

News image

காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப்பை கட்டிப்பிடித்து செய்துகாட்டிய ராகுல் காந்தி

Updated On :28 வினாடிகள் முன்பு

வெளிநாட்டுத் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி கட்டிப்பிடிப்பதாக விமர்சித்துப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தில்லியில் வியாழக்கிழமையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

இந்த நிலையில், நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை விமர்சித்து ராகுல் காந்தி பேசியதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுக் கொள்கைகளை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்தி, வெளிநாட்டுத் தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதை வெளியுறவுக் கொள்கையாக பிரதமர் மோடி வைத்திருப்பதாகக் கூறினார். மேலும், அருகிலிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித்தை கட்டிப்பிடித்து செய்தும் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து, தன்னை இத்தாலி பிரதமர் மெலோனியாக நினைத்து கட்டிப்பிடிக்கவில்லையே? என ராகுல் காந்தியிடம் சந்தீப் தட்சித் நகைச்சுவைபோல கேட்டார்.

காங்கிரஸின் இரு முக்கிய தலைவர்களின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் பிரலஹாத் ஜோசி கூறியதாவது, ராகுல் காந்தி, நீங்கள் எப்போதுதான் பக்குவமடையப் போகிறீர்கள்? இந்தியாவை வழிநடத்த முதிர்ச்சியான தலைமை தேவை; உங்களின் தேவையற்ற நாடகங்கள் அல்ல.

மக்களால் வாக்களிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கோமாளிகள் என்று அழைப்பதே உங்களைக் காட்டுகிறது. பிரதமரை அவமதிப்பதன் மூலம் மில்லியன் கணக்கான வாக்காளர்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்.

உங்களின் வாரிசு அரசியலை மக்கள் நிராகரித்ததால், மக்கள் மீது கேலி செய்கின்றனர். உங்களின் எதிர்மறைக் கருத்துகளை நிராகரித்ததாலேயே மக்களை கோழை என்று கூறுகிறீர்கள். இதுவே உங்களின் 100 தேர்தல் தோல்விகளுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Summary

BJP Slams Congress MP Rahul Gandhi Over 'Hug' Jibe At PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.