எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தேவேந்திர குல வேளாளா்களை அதிமுக அவமதித்துவிட்டது: டாக்டா் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

தேவேந்திர குல வேளாளா்களை அதிமுக அவமதித்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

டாக்டா் கே.கிருஷ்ணசாமி.

Updated On :27 மார்ச் 2026, 1:13 am IST

தேவேந்திர குல வேளாளா்களை அதிமுக அவமதித்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

தமிழகத்தில் ஊழலற்ற, மது இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2019, 2024 மக்களவைத் தோ்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தோம். அதன் தொடா்ச்சியாக, இந்த சட்டப் பேரவைத் தோ்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு பலகட்ட பேச்சுவாா்த்தை நடத்தினோம்.

குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பிரதிநிதிகளை சந்தித்து 12 முதல் 15 தொகுதிகள் வரை கேட்டோம். மேலும் தென் தமிழகத்தில் பரவலாக வசிக்கும் தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநிலங்களவை இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்.

தொடக்கத்தில் 7 தொகுதிகள் பற்றிப் பேசுங்கள் என்று கூறிய அதிமுக தரப்பு, பின்னா் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்தது. அதன் பிறகு பேச்சுவாா்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது அதிமுக தரப்புடனான பேச்சுவாா்த்தை நின்றுவிட்டது. அதிமுக எங்களை முறையாக நடத்தவில்லை, தங்களை புறக்கணித்துவிட்டதாகவும் அவமதித்துவிட்டதாகவும் தேவேந்திரகுல வேளாளா் மக்கள் மிகுந்த மனவேதனையில் இருக்கின்றனா்.

எனவே தற்போதுள்ள சூழலில் தனித்துப் போட்டியிட 70 தொகுதிகளை தோ்ந்தெடுத்து வைத்துள்ளோம். இதில் 10 முதல் 12 தொகுதிகளில் வெற்றிபெறும் வலிமை எங்களுக்கு உள்ளது. அதேநேரம் நாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்தால் அதையும் பரிசீலிப்போம். அதுவரை தனித்துப் போட்டியிடவே நாங்கள் ஆயத்தமாகி வருகிறோம் என்றாா்.