மும்பையில் செயல்படும் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான மசாகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 1125 டெக்னிக்கல் மற்றும் ஆஃப்ரேட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. இதற்கு 8,10, ஐடிஐ மற்றும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் போன்ற பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- பிட்டர் - 158
- பேப்ரிகேட்டர் - 133
- பைப் பிட்டர் - 130
- எலக்ட்ரீசியன் - 144
- கம்போசிட் வெல்டர் - 138
- செமி ஸ்கில்டு - 168 இடங்கள் உள்ளன. ஜூனியர் குவாலிட்டி கண்ட்ரோல் இன்ஸ்பெக்டர், ஸ்டோர் கீப்பர், ரிகர், பெயிண்டர் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.08.2016 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2016
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஏ4 வெள்ளைத்தாளில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். அதில் விவரங்களை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM (HR-&R-e-c&-NE), Recruitment Cell, Service Block 3rd Floor, Mazagon Dock Shipbuilders Limited, Dockyard Road, Mumbai-400010
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mazagondock.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர்கள் விக்ரம், தனுஷ் வாக்களிப்பு!

தேர்தல் நாள்.. வாக்களித்த தலைவர்கள்!

ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: மோடி

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! தமிழ்நாடு வெல்லும்: ஸ்டாலின் - நேரலை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

